Bigg Boss 2 Mumtaj Wiki,Biography,Family,Images,Movies-யார் இந்த மும்தாஜ்?
வணக்கம் தோழா நாம் இன்று BiggBoss 2 Tamil-இல் உள்ள மும்தாஜ் பற்றி நமக்கு தெரியாத விஷயங்களை பார்க்க இருக்கிறோம். நம் எல்லோருடைய வீட்டிலும் தினமும் இரவு ஒளிபரப்பாகி நம் அனைவரையும் பார்க்க தூண்டும் நிகழ்ச்சி தான் Bigg Boss. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள். இதற்க்கு காரணம் அவர்கள் Bigg Boss வீட்டில் இயல்பான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான்.அவர்கள் செய்யும் தவறுக்கு மக்கள் அவர்களை ஒட்டு போடாமல் வெளியே அனுப்புகின்றனர். அப்படியான நம் வாழ்க்கை முறையில் நடக்க கூடிய நிகழ்ச்சிகள் போல் இருப்பதால் நமக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்துவிடுகிறது. அதில் ஒரு நபராக சென்ற மும்தாஜ் பற்றி இன்று இந்த பதிவில் பார்க்கலாம்.

யார் இந்த மும்தாஜ்:
நமக்கு இந்த கேள்வியே தேவையற்றது தான். நம் அனைவருக்குமே மும்தாஜ் பற்றி நன்றாக தெரியும். அவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் மேலும் கதாநாயகிக்கு தோழியாகவும் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் தான் அவர் அதிகமாக நடித்துள்ளார். இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே மும்தாஜை மிகவும் பிடிக்கும். தமிழ் திரையுலகில் பல நடிகைகள் வந்தாலும் மும்தாஜ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். முக்கியமாக இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
bigg boss விஜயலக்ஷ்மி பற்றி தெரிந்து கொள்ள– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
திரைப்பட வாழ்க்கை:
மும்தாஜ் முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் நம் தமிழ் திரைப்பட துறையில் நடிக்க தொடங்கினார். மேலும் அவர் நடித்த முதல் திரைப்படமும் அது தான். அந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தார். அதற்க்கு பிறகு அவருடைய நடிப்பின் திறமையாலும் அவருடைய அழகாலும் தமிழ் மக்களை அவர் பக்கம் இழுத்து கொண்டார். அதன் பின் வரிசையாக அவருடைய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.இதனால் அவருக்கு ரசிகர் படை கடலென ஆனது. மும்தாஜ் நடிக்கிறார் என்பதற்காகவே படத்தை பார்த்த காலங்கள் உண்டு. அப்படி மிகவும் பிரபலமான நடிகை மும்தாஜ் இப்போது Bigg Boss வீட்டில் ஒரு சாதாரண பெண்ணாக சென்று அவருடைய இயல்பான கதாபாத்திரத்தில் வாழ்கிறார். அதனால் தான் இன்றும் அவரால் அந்த BiggBoss 2 Tamil வீட்டில் தொடர்ந்து இருக்க முடிகிறது.
திரைப்படத்தின் வாய்ப்பு குறைந்தது:
முன்னணி நடிகையாக இருந்தாலும் திரைப்பட துறையில் நீண்ட காலம் இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.அதே போல் தான் நம்முடைய மும்தாஜ் நல்ல திறமையான நடிகையாக இருந்தாலும் புது நடிகைகள் வந்ததும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. மேலும் அவருக்கு அம்மா அக்கா என ஏந்துக கதாப்பாத்திரங்களும் கிடைக்க வில்லை. எனவே அவர் தேர்ந்தெடுத்த துறை தான் இந்த Bigg Boss-2. இதற்க்கு காரணம் தன்னை மறந்த தன தன் ரசிகர்களுக்கு மீண்டும் அவரை ஞாபக படுத்தவும் அவருடைய திறமையை காட்டி மக்களை மீண்டும் அவர் பக்கம் பார்க்க வைக்கவும் தான். இதன் மூலம் மீண்டும் தமிழ் திரைப்பட துறையில் வர வாய்ப்புள்ளதாக உள்ளது.
மீண்டும் திரைப்பட துறை:
Bigg Boss-2 நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தி அதனால் தன வாழ்க்கையை மேம்படுத்தியவர்கள் பிரபலங்கள் மட்டும் அல்ல சாதாரண நபர்களும் தான். அதற்க்கு எடுத்து காட்டு தான் ஜூலி .இவர் Bigg Boss-1இல் இருந்தவர். அவரை பற்றிய பல விமர்ச்சனங்கள் எழுந்தாலும் அவர் இன்று திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு சென்றுள்ளார் என்பது மறுக்க முடியாது. ஒரு சாதாரண நபருக்கே BiggBoss 2 Tamil இந்த வாய்ப்பை பெற்று கொடுத்த போது நடிகைகளுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகும். இதற்க்கு காரணம் மக்கள் அனைவருமே இன்று Bigg Boss 2 Tamil பார்ப்பதால் தான். மக்கள் மனதில் இடம் பிடிக்க இது ஒரு பெரிய மேடை. மும்தாஜ் ஏற்கனேவே மக்கள் மனதில் உள்ளார். மேலும் அவர் இந்த Bigg Bossமூலம் மீண்டும் திரைப்படத்திற்கு வர போகிறார் என நம்பப்படுகிறது.
மக்கள் துணை:
நாம் அனைவருமே Bigg Boss 2 tamil பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அதில் மும்தாஜ் நல்ல நபராக நம் எல்லோருடைய மனதிலும் நிலைத்து விட்டார். ஆனால் இது தொடருமா இல்லையா என்பது தொடர்ந்து இந்த Bigg Boss பார்த்தால் தான் தெரிய வரும். ஆனால் மும்தாஜ்க்கு மக்கள் சப்போர்ட் உள்ளது என தெரிகிறது. மும்தாஜ் தமிழில் இது வரை 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். வர மீண்டும் திரைப்படத்தில் நடித்தால் மக்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என நம்ப படுகிறது.
மும்தாஜ் நடித்த படங்களின் விவரங்கள் பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Bigg Boss 2 இல் வெற்றி:
நம் அனைவருக்குமே மும்தாஜ் தான் Bigg Boss 2 Tamil-இல் வெற்றி பெறுவார் என தெரிகிறது. ஆனால் அது நடப்பதும் நடக்காமல் போவதும் கடைசியில் தான் தெரிய வரும். ஆனால் மும்தாஜ் இந்த Bigg Boss 2 மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இதுவே அவருக்கு பெரிய வெற்றி தான். மீண்டும் அவரை திரைப்படத்தில் பார்க்க முடியும் என நம்பலாம்.
மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் இயற்கை முறை மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
மும்தாஜ் புகைப்படங்கள்.





Related Searches:
Biggboss 2 vijayalakshmi
how to vote biggboss
biggboss new entry
second wild card entry
biggboss rithvika biography