Bigg Boss 2 Vijayalakshmi Wiki,Biography,Family,Images,Movies-யார் இந்த விஜயலட்சுமி?
வணக்கம் தோழா, இன்று BiggBoss 2 tamil-இல் புதிய பிரபலத்தை BiggBoss வீட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர் தான் திரைப்பட துறையில் பல படங்களை நடித்த விஜயலட்சுமி .யார் அந்த விஜயலட்சுமி என்பதை இந்த பதில் பார்க்கலாம்.அவரால் BiggBoss வீட்டில் நிலைபெற முடியுமா? அவரால் வீட்டில் என்ன என்ன புது பிரச்சனைகள் வர போகிறது?அவரால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியுமா? என்பதை தொடர்ந்து BiggBoss பார்த்தால் தான் தெரிய வரும். விஜயலட்சுமியை பற்றி தெரியதாவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் விஜயலட்சுமியை பற்றி முழுமையாகா பார்க்கலாம்.

யார் இந்த விஜயலட்சுமி:(BiggBoss 2 tamil)
இவர் திரைப்படதுறை நடிகையாவார். அது மட்டுமல்ல இவர் இயக்குனாய் அகத்தியனின் மகளும் ஆவார். சிறுவயதில் இருந்து நடிப்பின் மேல் ஆர்வம் கொண்ட விஜயலட்சுமி பள்ளி பருவத்தில் இருந்தே இதற்க்கான முயற்சிகளை செய்துள்ளார். தந்தை இயக்குனர் என்பதால் திரைப்பட துறையில் எளிதாக உள்ளே வர வாய்ப்பு கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்தி கொண்டார். அவர் தமிழ் படங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய திரைப்படங்களில் சென்னை 600028 மற்றும் அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
விஜயலட்சுமி திரைப்பட வாழ்க்கை:
இவர் 2007-இல் திரைப்பட துறைக்கு வந்தார். அவர் நடித்த முதல் திரைப்படம் சென்னை 600028. இந்த திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்த கிரிக்கெட் மற்றும் நட்பை மையமாக வைத்து எடுத்த திரைப்படம். இதனால் இந்த திரைப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. மேலும் அந்த திரைப்படத்தில் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதே போல் அவர் நடித்த இரண்டாம் திரைப்படம் அஞ்சாதே. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது(BiggBoss 2 tamil). இன்றும் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து தன்னுடைய நடிப்பின் திறமையை மக்களுக்கு தெரியபடுத்தினர்.
திரைப்பட துறையில் சரிவு:
திரைப்பட துறையில் முதல் இரண்டு படங்களில் மாபெரும்வெற்றியை பெற்ற விஜலக்ஷ்மிக்கு அடுத்த படங்கள் சரியாக அமையவில்லை. அவர் அதற்க்கு பிறகு நடித்த திரைப்படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பி பெறவில்லை.ஆனாலும் தன்னுடைய நடிப்பை கைவிடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இது வரை 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அனைவருக்கும் அவருடைய முதல் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தெரியும்.மற்ற திரைப்படங்கள் வரவேற்பை பெறவில்லா. அதன் பிறகு திரைப்பட துறையில் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் 2014 பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சின்னத்திரையில் வாய்ப்பு:
திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைக்காது என தெரிந்த விஜயலட்சுமி தமிழ் சின்னத்திரையில் நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழில் நாயகி என்ற சின்னத்திரையில் நடித்து வந்தார். சின்னத்திரையில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தல் திரைப்பட துறையில் வாய்ப்பு கிட்டலாம் என எண்ணத்தில் இதற்க்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Bigg Boss 2 வாய்ப்பு:
மக்கள் மனதில் இடம் பிடிக்க சின்ன திரையை தேர்வு செய்த விஜயலட்சுமிக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் இப்போது அவருக்கு BiggBoss 2-இல் வாய்ப்பு கிடைத்துள்ளது. Bigg Boss இல் பங்கெடுத்தல் கண்டிப்பாக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த Bigg Boss 1 இல் ஜூலி ஓவியா மக்கள் மனதில் இன்னும் உள்ளனர். அதே போல் நாமும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜலக்ஷிமியும் இதில் பங்கெடுக்க வந்துள்ளார். இதற்காக அவர் இப்போது நடித்து வந்த நாயகி சின்னத்திரையில் இருந்து விலகி விட்டார். Bigg Boss-ஐ போல் ஒரு பெரிய வாய்ப்பு வந்ததால் இவ்வாறு செய்துள்ளார் என அனைவரும் கூறுகின்றனர்.
விஜயலட்சுமி இந்த Biggboss 2 வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை தொடர்ந்து பார்த்தல் தான் தெரிய வரும்.அது மட்டுமல்லாமல் விஜயலக்ஷ்மி எந்த அளவிற்கு மக்களை கவருகிறார் என்பதும் முக்கியம். அப்போது தான் அவர்க்கு திரைப்பட துறையில் நடிக்க வாய்ப்பு கெடுக்க பெறலாம். இதனை அறிந்து அவர் செயல்படுவார் என தெரிகிறது.
விஜயலட்சுமி புகைப்படங்கள்:





Related Searches:
biggboss 2 tamil
biggboss new entry in tamil