Bigg Boss 2 Yashika Annand Wiki,Biography,Family,Images,Movies-யார் இந்த யாஷிகா ஆனந்த்?

வணக்கம் தோழா, இன்று இந்த பதிவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையை பற்றி தெரிந்து  கொள்ள இருக்கிறோம். அவர் யார் என்றால் நம்முடைய BiggBoss season 2 tamil-இல் இப்போது கலக்கி கொண்டு இருக்கும் யாஷிகா ஆனந்த் தான். இவரை பற்றி பல விமர்ச்சனங்கள்  வலைத்தளங்களில் பரவியது. இதற்க்கு காரணம் இவர் நடித்த திரைப்படம் தான். அப்படிப்பட்ட ஒரு விமரிசனத்திற்கு ஆளான நபரை BiggBoss இல் பார்த்ததும் அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியாகவும் ஒரு வகையில் ஆச்சர்யமாகவும் இருந்தது. இதற்க்கு காரணம் biggboss நம்முடைய அனைவரது வீட்டிலும் பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சி.ஏன் அவர் விமர்ச்சனைத்திற்கு ஆளானார்?  மனதில் இடம் பிடிக்க முடியுமா? அவர் இந்த Bigg Boss season 2 tamil-வெற்றியை பெற முடியுமா என பொறுமையோடு தான் பார்க்க வேண்டும். அதற்க்கு முன் அவரை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை பற்றி  பார்க்கலாம்.

 BiggBoss season 2 tamil
BiggBoss season 2 tamil

 

சொந்த வாழ்க்கை:

யாஷிகா ஆனந்த் பிறந்தது டெல்லியில் தான். ஆனால் அவர் வளர்ந்தது சென்னையில். சிறு வயதில் இருந்தே அனையவரிடத்திலும் மிகவும் வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவர் என அவரது பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனாலே அவரை பள்ளிப்பருவத்தில் மற்ற மாணவர்களுக்கு பிடிக்காமல் போனது என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

மேலும் அவர் சிறு  வயத்தில் இருந்தே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என  இருந்தார். அவர் பிறந்தது 1999 தான் ஆனால் அவர் முதல் வகுப்பு படிக்கும்போதே இன்டர்நெட் உபயோகிக்க தெரிந்துள்ளார். அவருக்கு சமூகத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.இதனால் அவர் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என துணிச்சலோடு இருந்தார்.

ரித்விகா பற்றி-தெரிந்து கொள்ள இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

திரைப்பட வாழ்க்கை:

யாஷிகா ஆனந்த் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம்  இருந்தார்.அவர்  பருவத்திலே பல மாடலிங் துறையில் நடித்துள்ளர். மேலும் பல விளம்பர காட்சிகளிலும் நடித்துள்ளார். திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவருக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

மேலும் திரைப்பட துறை வாய்ப்பு வந்த போது  அவருக்கு சரியாகா தமிழ் பேச தெரியாமல் இருந்ததால்  கொள்ள முடியவில்லை. இதனால் பல அவமானங்களை சந்தித்துள்ளார். ஆனாலும் அவர் மிக துணிச்சலான பெண்ணாக இருந்ததால் தொடர்ந்து வாய்பிற்க்காக காத்திருந்தார்.அவர் நடித்த முதல் திரைப்படம் கவலை வேண்டாம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதற்க்கு பிறகு “துருவங்கள் பதினாறு” படத்தின் மூலம் அவர் திரைப்பட துறையில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு பல விளம்பர நிகழ்ச்சிகளிலும், மேலும் கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தாளியாகவம் சென்றுள்ளார்.இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவும் தொடங்கியது.

திருப்பு முனையாக அமைந்தது :

அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்த நேரத்தில் அவரை நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படம் மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அதில் நம்முடைய கலாச்சாரத்திற்கு எதிராக இருந்ததால் மக்கள் முகம் சுளிக்கும்படி அமைந்தது. அதற்க்கு பிறகு அவரை வைத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் கேவலமாக சித்தரிக்க பட்டது. ஆனால் அதற்க்கு பயப்படாமல் பல பேட்டிகளில் அவர் மிக தைரியமாக பேசியுள்ளார். இருந்தாலும் கூட அந்த திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மனதில் அவரை பற்றிய எண்ணம் மாறவில்லை.இதனால் அவருக்கு திரைப்பட துறையில் இருந்து பட வாய்ப்புகளும் குறைந்தது.

BiggBoss season 2 tamil:

திரைப்பட துறை வாய்ப்பு கை விட்டு போகும் தருணத்தில் தான் அவருக்கு இந்த bigg boss வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி மக்கள் மனதில் உள்ள தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார். BiggBoss ஒரு நல்ல மேடை என தெரிந்து இதில் பங்கெடுத்தார். இப்போது அதில் சிறப்பாகவும் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ளார். அவர் BiggBoss வெற்றியாளராக இல்லாமல் ஆனாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதயே அவர் குறிக்கோளாக வைத்துள்ளார். அவர் அந்த எண்ணத்தை நிறைவேற்றுவாரா என தொடர்ந்து BiggBoss பார்த்தால் தான் தெரியும்.

யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்:

Biggboss season 2 tamil
Biggboss season 2 tamil
 BiggBoss season 2 tamil
BiggBoss season 2 tamil

Related Searches:

biggboss 2 rithvika

how to vote biggboss

biggboss 2 vijalakshmi

second wild card entry

biggboss 1 vs biggboss 2

Close