கேள்வி குறியானதா நயன்தாராவின் திருமண வாழ்க்கை ?
கேள்வி குறியானதா நயன்தாராவின் திருமண வாழ்க்கை ?
யார் இந்த நயன்தாரா?

இந்த கேள்வியே தேவையற்றது தான். தமிழ்நாட்டில் நயன்தாராவை தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆரம்ப காலத்தில் சாதாரண நடிகையாக இருந்த இவர் இப்போது தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவருடைய திரையுலக மற்றும் திருமண வாழ்க்கை பற்றி இந்த பதிவில் காண்போம்.
திரைப்பட வாழ்க்கை :
“ஐயா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நயன்தாரா. முதல் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த நயன்தாரா அதன் பிறகு கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார். ஆரம்ப காலத்தில் நயன்தாராவிற்கு இவ்வளவு ரசிகர் படை இல்லை. அதன் பிறகு வெளிவந்த படங்களின் மூலம் நயன்தாரா தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறினார்.
திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்:
“Billa” திரைப்படம் நயன்தாராவிற்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தல அஜித்-உடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் இருந்தும் நயன்தாராவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதை நன்றாக பயன்படுத்தி கொண்ட நயன்தாரா பல நடிகைகள் நடிக்க தயங்கும் நீச்சல் உடையில் நடித்து அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினார். அந்த படத்திற்கு பிறகு வெளிவந்த வில்லு, சத்யம், என பல படங்களில் நயன்தாரா அதே போல நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதன் பிறகு நயன்தாராவிற்கு ரசிகர் படை அதிகமானது.

நயன்தாரா என்று அவருடைய பெயரை சொல்லி அழைப்பதை விட தமிழ் நாட்டு இளைஞர்களின் என்றும் கனவு கன்னி என்று சொல்வதே சரியாக இருக்கும்.
சேர நாட்டு இளவரசி என்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா, திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் புதிய நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருந்தாலும் நயன்தாராவின் ரசிகர் படை இன்றும் கடல் அளவு தான் உள்ளது .
இன்னும் 3 வருடங்கள் நயன்தாரா தான் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பார் என்று தென்னிந்திய திரையுலகம் கூறியுள்ளது.
தமிழ் திரைஉலகின் “lady superstar” என்று அழைக்கப்படும் நயன்தாராவின் திருமண வாழ்க்கை பற்றி சமீபத்தில் வெளியான நம்பகதக்க செய்தியை பற்றி இப்போது காண்போம்.

இவ்வளவு திறமையும் அளவில்லாத பேரழகும் உள்ள நயன்தாராவின் திருமண வாழ்க்கை பலமுறை பல நடிகர்களோடு நடக்க இருந்து கடைசி நேரத்தில் நடக்காமல் போனது. இது நயன்தாராவிற்கு வருத்தமாக இருந்தாலும் அவருடைய ரசிகர்களுக்கு உண்மையில் சந்தோசமாக தான் இருந்தது. தற்போதும் நயன்தாராவுடன் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் கோடி கணக்கில் உள்ளனர்.
நயன்தாராவின் திருமண வாழ்வில் நடந்த சோகத்தால் அவர் இரண்டு ஆண்டுகள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் அவருடைய ரசிகர் படை குறையவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்த “ராஜா ராணி” திரைப்படத்திற்கு பிறகு அவருடைய ரசிகர் படை அதிகமானது.தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கிய நயன்தாரா அனைத்து இளைஞர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
முதலில் தடையான திருமண வாழ்க்கை:

நயன்தாராவின் முதல் காதலாக நடிகர் சிம்பு இருந்தார் என அனைவருக்கும் தெரியும்.இவர்களின் புகைப்படங்கள் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளானது. திரைப்படத்தில் தான் அவ்வாறு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் outing செய்த புகைப்படங்களும் அவ்வாறு நெருக்கமாக வெளியாகி இருவரின் திரைப்பட வாழ்க்கையை சர்ச்சையாக்கியது. திருமணம் ஆக போகிறது என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்குமாறு புகைப்படங்கள் வெளியானது. யாரும் எதிர்பாக்காத கடைசி நேரத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இடையே பிரிவு ஏற்பட்டது. அந்த பிரிவு நிரந்தரமாகி திருமணமும் நடக்கவில்லை. அதன் பிறகு நயன்தாராவின் திரைப்பட வாழ்க்கையும் இரண்டு வருடம் தடையானது.
இரண்டாவதாக தடையான திருமண வாழ்க்கை:

சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவால் வாடிய நயன்தாராவிற்கு இரண்டாவதாக பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தன் கையில் “tattoo”-வாக எழுதியிருந்தார். இதன் மூலம் நயன்தாரா-பிரபுதேவா காதல் உறுதியானது. ஆனால் இந்த காதலும் நயன்தாராவிற்கு திருமணத்தில் முடியவில்லை.
தற்போது உள்ள காதல்:

இப்பொழுது நயன்தாராவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் உருவானது. இந்த காதல் திருமணத்தில் முடியும் என அனைவராலும் நம்ப படுகிறது. இதற்க்கு காரணம் அவர்கள் அனைத்து விழாவிற்கும் ஒன்றாக செல்வது மற்றும் இருவரும் நெருக்கமாக “selfie“ எடுத்து கொள்வதும் தான். இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா ஒரு மேடையில் விக்னேஷ் சிவன்-யை “fiance” என்று கூறியுள்ளார். அதே போல் விக்னேஷ் சிவனும் அவருடைய “twitter” பக்கத்தில் விரைவில் திருமண நாள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த காதலாவது “baby’ma” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவிற்கு திருமணத்தில் முடியுமா? என்று திருமணம் ஆனால் தான் தெரியவரும்.