பேட்ட, விஸ்வாசம் வசூலில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட் எது ?
பேட்ட, விஸ்வாசம் வசூலில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட் எது ?

பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளன.
இந்த இரு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளன ஏனெனில் இரு படங்களும் குடும்ப படம் .
பொங்கல் விடுமுறை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து வருவதால் இரு படங்களும் வசூலில் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இரண்டு படங்களும் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருப்பதால் இரண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் விபரம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை விஸ்வாசம் முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டு நாட்களில் விஸ்வாசம் 26 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது ஆனால் பேட்ட 22 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் செய்து கொண்டிருக்கிறது.
ரிலீஸான முதல் நாளில் உலகம் முழுவதும் பேட்ட ரூபாய் 49 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் 44 கோடி வசூல் செய்து உள்ளது.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வரை பேட்ட வசூலாகியுள்ளது. விஸ்வாசம் படம் இதுவரை 83 ஆயிரம் டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது .
இப்போதுள்ள நிலவரத்தின் படி இரு படங்களும் சரிசமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஆனால் உண்மையான வசூல் நிலவரம் ஒரு வாரம் விடுமுறைக்கு பின்னரே தெரிய வரும் ஏனெனில் இடைப்பட்ட நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்க உயரலாம்,குறையலாம் எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
எது எப்படி இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கும் , தல ரசிகர்களுக்கும் இந்தப் பொங்கல் சிறப்பானதாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
Searches related to tamil cinema news
- dinakaran tamil cinema news
- tamil cinema news entertainment websites
- indiaglitz tamil cinema news
- daily hunt tamil cinema news
- maalaimalar cinema news
- tamil cinema kisu kisu
- new tamil cinema
- cinema vikatan