நேற்று தல, இன்று சிம்பு !
நேற்று தல, இன்று சிம்பு ,என்ன நடந்தது?

சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்தார். பாரதப் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும், மோடி தொண்டர்களாக நீங்கள் மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
அஜித் நேர்மையானவர் என்றும் ,அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர்.அவரைப்போல ரசிகர்களும் இருக்கின்றன. அதனால் தான் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர் என்றும் கூறினார்.
இது வலைதளங்களில் பிரபலமானது அதனால் நடிகர் அஜித் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அஜித்தின்அறிக்கை!

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் மிக தீர்க்கமாக உள்ளேன். என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே அதனால்தான் ரசிகர் மன்றங்களையும் சில வருடங்களுக்கு முன்னர் நான் கலைத்தேன்.
எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை ,ஒரு சராசரி மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு.அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு .அதை நான் யார் மீதும் திணிப்பதில்லை மற்றவர்கள் என் மேல் திணிக்க விட்டதுமில்லை. ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும் .என் பெயரோ ,என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் மற்றும் பணியில் உள்ள தங்களது கடமையை செவ்வனே செய்வதும் ,சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும் வேற்றுமைகளை் கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவது ,அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.
“வாழு வாழ விடு”
இவ்வாறாக கூறினார் இந்த அறிக்கை நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியத. இந்த அறிக்கைதான் ட்ரெண்டிங்கில் இருந்தது.
ட்ரெண்டிங்கில் சிம்பு!

சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்றைய தினம் அஜித் ட்ரெண்டிங்கில் இருந்தார் இன்று அவரின் ரசிகர் சிம்பு ட்ரெண்டிங்கில் இருக்கிறார். சிம்பு சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் “வந்தா ராஜா வா தான் வருவேன்”.
இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் சென்ற வாரம் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.அதில் அவர் கூறியது படம் ரிலீஸ் ஆனதும் ரசிகர்கள் கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட் வாங்கி பார்க்கவும். வெளியில் திருட்டுத்தனமாக இருக்கும் டிக்கெட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு கட் அவுட் வைப்பதும்,பால் அபிஷேகம் செய்வதும் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக இந்த முறை புதிதாக உங்கள் அம்மாவிற்கு ஒரு புடவை , அப்பாவிற்கு ஒரு சட்டை தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுங்கள் என்றும் அன்புக்கட்டளையிட்டார்.
இதைப் பார்த்த சிலர் சமூகவலைதளங்களில் அதற்கு கிண்டல் செய்யும் விதமாக உங்களுக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி ,எதற்கு இந்த விளம்பரம் என்றும் கேட்டுள்ளனர்.
கோபம் கொண்ட சிம்பு இன்று புதியதாக வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் எனக்கு பெரிதாக ரசிகர் பட்டாளம் இல்லை ,ஆமாம் ஒரு சில பேர் இருக்காங்க அவங்க என்ன பண்றீங்க இந்த தடவ இதுவரைக்கும் செய்யாத அளவுக்கு பெருசா கட் அவுட் வைக்க வேண்டும். பால் அபிஷேகம் பாக்கெட்டுகளில் செய்ய வேண்டாம். பெரிய அண்டா வாங்கிக்கொண்டு பால்அபிஷேகம் செய்யவும். கண்டிப்பா செய்யணும் இது என்னோட அன்பு கட்டளை அப்படின்னு சொல்லி இருக்கார். இந்த விஷயம் தான் சமூகவலைதளங்களில் இன்றைக்கு டிரெண்டிங்கில் இருக்கு.
Searches related to tamil cinema
- new tamil cinema
- latest tamil cinema
- dinakaran tamil cinema news
- tamil cinema free download
- tamil cinema news entertainment websites
- ajith kumar photos
- simbu images