சர்கார் (thalapathy 62) – வெடித்தது சர்ச்சை :

விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கும் thalapathy 62 திரைப்படத்தின் 1st Look மற்றும் திரைப்படத்தின் பெயர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 அன்று வெளியிடபட்டது. திரைப்படத்தின் பெயர் மற்றும் 1st Look வெளியான ஒரு சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில்(facebook, twitter, whatsapp) ட்ரெண்ட் ஆனது.

thalapathy 62
thalapathy 62

சர்ச்சைக்கு உள்ளன விஜயின் படங்கள்(thalapathy 62) :

சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பெரும் சர்ச்சசைக்கு உள்ளாகிறது. விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, தலைவா, கத்தி, மெர்சல் என பல வெற்றி படங்கள் அனைத்தும் சர்ச்சைக்கு உள்ளாகின. விஜய் பெரும்பாலும் மக்களின் பிரச்சனைக்கு நேரடியாகவும், அவர் நடிக்கும் படத்தில் மூலமும் அவருடைய ஆதரவை தருவார். அவர் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் விவசாயிகளின் வாழ்க்கை பிரச்சனையை எடுத்து கூறினார் . அதே போல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மெர்சல் திரைப்படத்திலும் மக்களின் பிரச்சனையை எடுத்து கூறினார் அந்த திரைப்படத்தின் வசனங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

thalapathy 62
thalapathy 62

சர்கார் திரைப்படம் :(thalapathy 62)

தற்போது படப்பிடிப்பில் உள்ள விஜயின் 62-வது (thalapathy 62) படத்தின் பெயர் மற்றும் 1st look விஜயின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. விஜயின் படங்கள் வெளியானதும் சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாக இருக்கும் ஆனால் திரைப்படத்தின் பெயர் வெளியானதற்கே இவ்வளவு பெரிய சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளாகும் வகையில் இருந்தது.
படத்தின் பெயர் சர்கார், அதாவது அரசாங்கம் . விஜய் படத்தின் வசனங்கள் பெரும்பாலும் மக்களின் பிரச்சனையை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தின் பெயரே சர்கார் என உள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்கள் அனைவருமே பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

வெடித்தது சர்ச்சை.

விஜயின் சர்கார்(thalapathy 62) திரைப்படத்தின் பெயரும் 1st look  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மற்றும் கமல் அவர்களுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என கூறப்பட்ட நிலையில் அவருடைய இந்த திரைப்படத்தின் பெயர் அவருடைய அரசியல் பயணத்திற்காக தான் என அனைவரும் கூறுகின்றனர். ஜெயலலித்தா ரஜினி கமல் ஆகியோர் திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அதே வரிசையில் நடிகர் விஜயும் வருவார் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
சர்கார்(thalapathy 62) திரைப்படத்தின் 1st look-இல் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பார். இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சிகரெட் மற்றும் மது அருந்துவதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என மக்கள் அனைவரும் கூறியுள்ளனர். விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ரசிகர் படை அதிகமாக உள்ளனர். அதிலும் முக்கியாக நடிகர் விஜய்-க்கு சிறியவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். அவ்வாறு இருக்கும் போது இதை போல் சிகரெட் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து இருக்கலாம் என அனைவரும் கூறியுள்ளனர் .

அரசியல் தலைவர்கள் கண்டனம் :(thalapathy 62)

அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்களும் இதற்க்கு பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.நடிகர் விஜய் இதற்க்கு முன் இதை போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ள நிலையில் இவ்வாறு செய்தியிருப்பது தவறு என கூறியுள்ளார்.

thalapathy 62
thalapathy 62

இதற்க்கு முன் வெளிவந்த மெர்சல் திரைப்படத்திலும் இதே போல் சிகரெட் அடிப்பதை போல் நடித்துள்ளார். விஜய் திரைப்படத்தில்(thalapathy 62) மூலம் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது நல்லதாக உள்ளது ஆனால் இது போல் ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுவது தவறானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
இந்த சர்ச்சையை பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு விடம் கேட்ட பொழுது, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவர்களை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என கூறினார்,
இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ள விஜயின் சர்கார் திரைப்படம் இப்போதே சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்த்து கொள்ள கீழே உள்ள bell icon-ஐ க்ளிக் செய்யவும்.

Close