தளபதி விஜய் 63 படத்தில் சிகை கதிர் !

தளபதி விஜய் 63 படத்தில் கதிர் !

‘ சர்க்கார் ‘ இப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அட்லீ இயக்கும் இந்தப் படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் சிகை  படத்தின் நாயகன் கதிர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என தகவல் வெளிவந்தன.

kadhir-sigai
kadhir-sigai

கதிர்

விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிறந்த மனிதர். அவரின் சிறந்த ரசிகன் நான். இன்னிக்கு வரைக்கும் அப்படித்தான், ஆனால் அவர் கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு அது எனக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது இதை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது.

அட்லி அண்ணா எனக்கு நல்ல நண்பர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் என் சினிமா வளர்ச்சியை அடிக்கடி பேசிய நபர். பரியேறும் பெருமாள் படத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தப்போ பேசத்தான் கூப்பிட்டார் என்று நினைத்தேன் ஆனால் என்னுடைய அடுத்தப் படத்தில் உனக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறினார் .

இன்ப அதிர்ச்சியில் இருந்து நான் வெளிவருவதற்கு முன்னரே கதையை முழுவதுமாக சொல்லிவிட்டார் . சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல் முக்கியமான கதாபாத்திரமாக கொடுத்துள்ளார் அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன்.

இது என்னுடைய நீண்ட நாள் ஆசை இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் அப்படின்னு சொல்லி இருக்கார் கதிர் .

இதைப்பற்றி விஜய் சேதுபதி அண்ணா கிட்டயும் நான் பேசினேன் அவர் என்னுடைய நலம் விரும்பி என்றும் கூறியுள்ளார்.

அதற்கு விஜய் சேதுபதி அண்ணா சூப்பர் டா தம்பி கண்டிப்பா உனக்கு இது மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று பாராட்டினார்.

என்னை சுற்றி இருக்கிற எல்லோருக்குமே விஜய் அண்ணா படத்தில் நடிக்கிறது செம்ம சந்தோஷத்துல இருக்காங்க சூட்டிங் தொடங்க  போகுது  விஜய் அண்ணாவ பார்க்கிறதுக்கு ஆர்வமாக  இருக்கேன் என்று சொன்னாராம்.

அப்பொழுது சிகை படம் குறித்து கேள்வி கேட்டு உள்ளார்கள்.

சிகை படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாதது உங்களுக்கு

வருத்தமா ?

இல்லை இது அப்பா எடுத்த படம் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு எடுத்தது நான்தான் ‘பரியேறும் பெருமாள்‘ படத்திற்கு பிறகுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது . அதுமட்டுமில்லாமல் இது டிஜிட்டல் பார்முலாவுக்கான படம்தான்.

இந்தப் படத்தில் காமெடி, மசாலா என எதுவுமே இந்த படத்தில் இருக்காது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது கிடையாது.

அதனால தான் இந்த முடிவை நான் எடுத்தேன் எனக் கூறியிருக்கிறார். சிகை படத்தை பார்த்து பல நல்ல கதைகளைத் நல்ல படமா பண்ண பலரும் முன் வருவார்கள் என்று நம்புகிறேன் .

எதிர்காலத்தில் மக்கள் கிட்ட டிஜிட்டல் பார்முலா வரவேற்பு கிடைக்கும்னு நான் உறுதியா இருக்கேன் அப்படின்னு சொல்லி இருக்கார்.

Searches related to tamil cinema :

  • new tamil cinema
  • latest tamil cinema
  • tamil cinema free download
  • tamil cinema news entertainment websites
  • dinakaran tamil cinema news
  • tamil cinema kisu kisu
  • indiaglitz tamil cinema news
  • tamil cinema websites
Close