வட சென்னை உடன் மோதும் சீமராஜா:

வட சென்னை உடன் மோதும் சீமராஜா: (Vada chennai VS Seemaraja)

தனுஷ்(Dhanush) நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் வடசென்னை (vada chennai movie). பல வெற்றிப்படங்களை இயக்கிய வெற்றிமாறன் தனுஷ் உடன் இணையும் 3 வது படம் வட சென்னை. இதற்க்கு முன் பொல்லாதவன் ஆடுகளம் என மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதே போல் வளர்ந்துவரும் நடிகர்களில் முக்கியமாக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). “3” படத்தில் தனுசுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது தனுஷ் படத்துடன் போட்டி போடும் வகையில் வடசென்னை வெளியாகும் தேதியில் (Vada chennai release date) சீமராஜா திரைப்படம் வெளியாக உள்ளது.

Vada Chennai
Vada Chennai

வட சென்னை திரைப்படம்: (Vada chennai Release date)

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் கூட்டணி வடசென்னை. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகும் வடசென்னை திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என அனைவராலும் நம்பபடுகிறது. இதற்க்கு காரணம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் பொல்லாதவன் திரைப்படங்களின் வெற்றி தான்.இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றாலே அனைவரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள் அவருடைய திரைக்கதை அனைவராலும் பாராட்டும்படி இருக்கும். அவர் இயக்கிய விசாரணை திரைப்படம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வடசென்னையில் நடிக்கும் பிரபலங்கள்: (Vada chennai movie)

நீண்ட காலமாக தயாராகி கொண்டுவரும் வடசென்னை திரைப்படம் 3 பாகமாக வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரும் நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தனுஷ் ரசிகர்கள் மிக வெறித்தனமா வடசென்னை(Vada chennai release date) படத்திற்காக காத்திருக்கின்றனர்.

Vada Chennai
Vada Chennai

சந்தோஷ் நாராயணன் வடசென்னை திரைப்படத்திற்கு இசையமைக்கிரார்.. வடசென்னை திரைப்படம் அனைவரையும் திருப்த்திபடுத்தும் வகையில் இருக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறி உள்ளார். அதே போல் நடிகர் தனுஷ் ஒரு பேட்டியில் வடசென்னை திரைப்படத்தை பற்றி கூறும்பொழுது திரைப்படம் நன்றாக தயாராகி கொண்டுவருகிறது. விரைவில் திரைக்கு வரும் (Vada Chennai release date) என்று கூறியுள்ளார்.

சீமராஜா திரைப்படம்: (Seema Raja movie)

சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் சீமராஜா. இந்த திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். R.Dராஜா இந்த படத்தை தயாரித்து வருகிறார். சீமராஜா திரைப்படம் நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படமாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். சமீத்தில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான “வேலைக்காரன்” திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, அதே போல் சமந்தா விஷாலுக்கு ஜோடியாக நடித்து வெளியான “இரும்புத்திரை”  திரைப்படமும் திரைப்பட துறையில் அனைவராலும் பாராட்டத்தக்க படமாக இருந்தது. இப்போது இவர்கள் இருவரும் (சிவகார்த்திகேயன்-சமந்தா) இணைந்து சீமராஜா திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் .

SeemaRaja
SeemaRaja

சீமராஜா திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் :

சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் சீமராஜா திரைப்படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் சமந்தாவும் சாதாரண கதாநாயகியாக இல்லாமல் சிலம்பாட்ட கலையும் தெரிந்த ஒரு ஆசிரியராக படம் முழுவதும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதற்காக 10 நாட்கள் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இதை தவிர சூரி யோகிபாபு மனோபாலா சதிஷ் என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது.

Seema Raja
Seema Raja

சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்” ஆகிய படங்கள் நகைச்சுவையில் மக்களை ஈர்த்தது. அதே போல் இந்த திரைப்படமும் நகைச்சுவையாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.

வடசென்னை VS சீமராஜா :(Vada chennai VS Seema Raja)

தனுஷ் நடிக்கும் வடசென்னை(Vada Chennai) மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக நம்பகத்தக்க செய்திகள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கம் திரைப்படம் என்பதால் சீமராஜா திரைப்பட குழுவினர் சற்று யோசித்து தான் படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. செப்டம்பர் 13th விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு படங்களும் வெளியாகப்போகிறது என கூறப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமான செய்தி வரும் என நம்பப்படுகிறது.
ஒரே நாளில் வெளியாகுமா? இல்லை சீமராஜா திரைப்படம் மட்டும் வெளியாகுமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Close