விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து-Vijay 44th Birthday News :
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து (vijay birthday Celebration Cancelled):
ஜூன் 22 என்றாலே தமிழ்நாட்டில் திருவிழா தான், காரணம் அன்று தான் இளைய தளபதி விஜய்-இன் பிறந்தநாள். விஜய் ரசிகர்கள் அனைவரும் அவருடைய பிறந்தநாளை ஒரு திருவிழாவாக தான் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடே ஜூன் 22 இல் கலைகட்டும்.

மற்ற நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் அந்த நாளில் மட்டும் தான் கொண்டாடுவார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் 10 நாட்களுக்கு முன்பாகவே தினமும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். விஜயின் பிறந்தநாள் அன்று ஏராளமான உதவிகளையும் பட்டாசு வெடித்தும் , விஜய் இன் உருவ படத்திற்கு பாலபிஷேகம் மற்றும் அன்னதானம் என தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதிகளில் செய்வார்கள்.ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாள்(vijay birthday 2018) அன்று அவருடைய ரசிகர்கள் இவ்வாறு தான் கொண்டாடிவருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புதிய வழியில் விஜய்-இன் பிறந்தநாளை(vijay birthday) அனைவரும் வியக்கும் வகையில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த வருடம் விஜய் இன் பிறந்த நாள் அன்று விஜய் இன் 3D புகைப்படத்தை அனைவரும் Whatapp,Facebook,Twitter, போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் திருப்பினர் . அது வரை இந்தியாவில் எந்த நடிகர்களுக்கும் அவ்வாறு புகைப்படத்தை ட்ரெண்ட் ஆக்கவில்லை .
Check This: கேள்வி குறியானதா நயன்தாராவின் திருமண வாழ்க்கை
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்ததற்கான காரணம்.
சமூக பிரச்சனைகள் மற்றும் மக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் குணத்தால் தான் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று விஜய் கூறியள்ளார்.

திரைப்படமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையாக இருந்தாலும் சமூக பிரச்சனைகளை மக்களுக்காக பேசுபவர் இளையதளபதி விஜய் என்று அனைவருக்கும் தெரியும். அதே போல் அவரும் அனைத்து விதமான மக்கள் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு வழியில் அவர் தன்னுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்.
திரைப்படத்தில் பேசிய சமூக பிரச்சனை:
விஜய் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் சமூக பிரச்சனைகளை வெளிக்காட்டும் வகையில் வசனங்கள் இடம்பெறும்.


அவர் நடித்து வெளிவந்த கத்தி திரைப்படத்தில் விவசாயிகளின் வாழ்க்கை பிரச்சனையையும், மெர்சல் திரைபடத்தில் மருத்துவதுறையில் உள்ள பிரச்சனை மற்றும் அதிகமாக சர்ச்சசைக்கு உள்ளான GST-ஆல் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றிய வசனங்கள் இடம் பெற்றிருக்கும். தற்போது வெளியாக உள்ள விஜய் நடிக்கும் 62வது படமும் இதே போல் ஒரு சமூக பிரச்சனையை வெளிக்காட்டும் படமாக தான் இருக்கும் என நம்ப படுகிறது. இதற்க்கு முன் விஜய் நடித்த கத்தி படத்தை இயக்கிய முருகதாஸ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
நிஜ வாழ்க்கையில் பேசிய சமூக பிரச்சனை:
திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இளையதளபதி விஜய் மக்களுக்கான சமூக பிரச்சனைகளில் அவருடைய ஆதரவை கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரும் எதிர்பாக்காதவாறு போராட்ட களத்தில் வந்து அவருடைய ஆதரவை கொடுத்தார். அதே போல் பணமதிப்பிழப்பில் மக்கள் அனுபவித்த கஷ்டங்களை பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் BEHINDWOODS நடத்திய விருது வழங்கும் மேடையில் விவசாயிகளின் வாழ்வை பற்றியும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் கூறினார். அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் மிக வேகமா பரவியது.
தூத்துக்குடி பிரச்சனை:
சமீதத்தில் தமிழ்நாட்டையே கண்கலங்க வைத்த தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இளையதளபதி விஜய் உயிரிழந்தவர்களின் குடுபங்களை நேரில் சென்று அவர்களுக்கு அவருடைய அனுதாபத்தை தெரிவித்ததோடு 1லட்சம் நிதியுதவியும் வழங்கினார். இதைஅவர் யாரும் அறியாதவாறு இரவில் தூத்துக்குடிக்கு சென்று கொடுத்துள்ளார். எந்த தொலைக்காட்சிக்கும் இது தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி அதிகமாக பரவியது.

இவ்வாறு தமிழ்நாட்டில் அனைவரும் அந்த தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களை பற்றி மனம் வருந்தும் இந்த நேரத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவது சரியாக இருக்காது என இளையதளபதி விஜய் கூறியுள்ளதாக அவருடைய ரசிகர் மன்றத்திலிருந்து செய்தி வந்துள்ளது.
இன்னும் ஒரு சில தினங்களில் விஜய் இதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது. ஆனால் அவருடைய ரசிகர்கள் இப்போது இருந்தே அவருடைய பிறந்தநாளை கொண்டாடி தான் வருகிறார்கள்.
Related Searches of vijay birthday 2018:
vijay birthday celebration today
today vijay birthday celebration 2018
vijay 44th birthday image
vijay 44th birthday videos 2018
vijay birthday celebration videos
vijay birthday song
vijaybirthday date