தல அஜித்-இன் விசுவாசம் பற்றிய பிரம்மாண்ட செய்தி-Visuvasam Latest News

தல அஜித்-இன் விசுவாசம் பற்றிய பிரம்மாண்ட செய்தி: Visuvaasam latest news:

தல என்றாலே தமிழ் திரையுலகில் மட்டுமல்லால் தெலுங்கு, மலையாளம் என அனைத்து தரப்பினரும் மதிக்கத்தக்க மனிதராக கருதப்படுகிறார். தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக இருப்பவர் தல அஜித். சினிமா துறையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் தன்னுடைய திறமையையும் தன் மீது உள்ள தன்னம்பிக்கையை மட்டுமே வைத்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ajith-visuvaasam-stills
ajith-visuvaasam-stills

ரசிகர்கள் கொடுத்த ஆதரவு:

அஜித் இன் அநேக திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் தல ரசிகர்கள் என்றும் அவருக்கு பெரும் ஆதரவாக தான் இருந்தார்கள். படம் வெற்றியோ தோல்வியோ ஆனால் தல அஜித்-ஐ திரையில் பார்த்தால் திரையரங்கம் அதிரும் வகையில் அவருடைய ரசிகர் படை ஆரவாரத்தோடு கரகோஷங்களை தருவார்கள்.

ajith-visuvaasam
ajith-visuvaasam

அவருடைய  சிறு பார்வை கூட திரையரங்கை அதிர வைக்கும் வகையில் மாஸ்-ஆகா இருக்கும். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அவருடைய திரைப்படங்கள் இருந்தாலும் பெரும்பாலும் தல திரைப்படங்கள் என்றால் தமிழ்நாட்டு இளைங்கர்களுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும்.

அஜித்-சிவா தொடரும் கூட்டணி :

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் 4 வது படம் விசுவாசம். இதற்க்கு முன் வீரம், வேதாளம், விவேகம், என மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா. கடைசியாக வெளிவந்த விவேகம் திரைப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி புதிய சாதனையை படைத்தது.

visuvaasam latest news
visuvaasam latest news

விவேகம் படத்தின் எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அனைவருக்கும் இருந்தது. விவேகம் வியாபார ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இதை தொடர்ந்து இப்போது வெளிவர உள்ள  விசுவாசம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

விசுவாசம் சண்டை காட்சிகள்:

visuvaassam-stunts
visuvaassam-stunts

விசுவாசம் படத்தில் சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த படத்தில் தல அஜித் டூப் இல்லாமல் அவரே சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதற்க்கு முன் பல படங்களில் தல அஜித் இவ்வாறு டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடித்து அனைவரையும் வியப்படைய செய்துள்ளார். வீரம், பில்லா போன்ற அநேக படங்களில் பல சிரமமான சண்டை காட்சிகளில் கூட டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

விசுவாசம் தீம்சாங்:

visuvaasam-theme-song
visuvaasam-theme-song

தல படம் என்றாலே பாடல்களை விட தீம் சாங் தான் மிக முக்கியமாக கருதப்படும். திரையில் தல அஜித் வரும் போது தீம் சாங் திரையரங்கையே அதிர வைக்கும் வகையில் இருக்கும்.விசுவாசம் படத்தின் இரண்டு பாடல்கள் முடிந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் இப்போது தீம் சாங் உருவாக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

கதை கேட்க்காமலே நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா:

visuvasam-latest-updates
visuvasam-latest-updates

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நயன்தாரா . தல அஜித்-நயன்தாரா ஜோடி ஏற்கனேவே ஏகன், பில்லா, ஆரம்பம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர்.இப்போது விசுவாசம் படத்திலும் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு நயன்தாரா கதையை கேட்க்காமலே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் .  தல அஜித் மீது உள்ள மரியாதை மற்றும் நம்பிக்கையால் சம்மதம் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரட்டை வேடத்தில் தல அஜித்: (visuvasam latest news)

visuvasam-latest-news
visuvasam-latest-news

இப்போது படப்பிடிப்பில் உள்ள விசுவாசம் திரைப்படத்தில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக நம்பகத்தக்க தகவல்கள் வெளியாகி உள்ளன.அண்ணன்-தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதும் தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ள விசுவாசம் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த தகவல்.

இந்த தீபாவளி தல ரசிகர்களுக்கு தல தீபாவளியாக தான் இருக்கும்.

Close