முகம் பொலிவு பெற வேண்டுமா ?-beauty tips for Face whitening in tamil
நம் நாட்டின் நிறம் கருப்பு, உழைப்பாளி இன் நிறம் கருப்பு, கருப்பு தாங்க அழகு என பல பேர் சொன்னாலும் ,நாலு பெரு முன்னாடி இருக்கும் போது கருப்பை இருக்கவங்க கொஞ்சம் பீல் பண்ணுவாங்க.
அது ஏதோ கிரீம், பேஸ்ட் ,சோப்பு எல்லாம் போடுவாங்க ஆனா பணம் மட்டும் தான் செலவு ஆகும் கலர் ஆகவே மாட்டோம் .
நம்ம வீட்ல இருக்கற பொருட்களை வெச்சு சீக்கிரமாவே முகத்தை பளபளப்பை கொண்டு வர முடியும்.
அதுல சில குறிப்புகளை சொல்றேன் வாங்க பாக்கலாம் .
Beauty tips for Face whitening :

- ஒரு கப் கேரட் துருவல் எடுத்து கொண்டு ,ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் கடலை மாவு சேர்த்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும் .அதனை முகத்தில் சேர்த்து 15 நிமிடம் மாஸ்க் போடவும்.இதே போல 15 நாட்கள் செய்து வரவும் .முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
- அடுத்து சோற்று கற்றாழை எடுத்து முல்தானி மட்டி உடன் சேர்த்து face பேக் செய்து 20 நிமிடம் முகத்தில் பூசி கொள்ளவும். இதே போல இரண்டு வாரம் தொடர்ச்சியாக செய்து வரவும்.முகன் பொலிவு பெரும்.
- அடுத்தபடியாக எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தாவி 20 நிமிடம் கழித்த குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இது மிகவும் சிறந்த பிளீச் மற்றும் சுலபமாக செய்ய முடியும்.இதனால் முகத்தில் உள்ள கருமை நிற புள்ளிகள் நீங்கும் . இதனை பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் செய்யலாம்.
- சில பேர் வெயிலில் சென்று வருவதால் முகம் கருமையாக மாறும் .அதற்கு பப்பாளி பழத்தை எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி கொள்ளவும் 20 நிமிடம் கழித்து குளித்த நீரால் கழுவவும்.இதே போன்று 20 நாட்கள் செய்து வர முகம் பொலிவு பெரும்.
- சிறிதளவு தேன் , எலுமிச்சை சாறு மற்றும் நான்கு ஸ்பூன் தயிர் கலந்து அதனுடன் முட்டையின் வெள்ளை கரு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.இதனை முகத்தில் பூசி 30 நிமிடம் களைத்து கழுவவும் இப்புடி ஒரு வாரம் செய்து வந்தால் முகம் நன்றாக பொலிவு பெரும்.