ஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா?How to remove pimples in tamil

அனைவருமே அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்வது நம்முடைய முகத்தை தான். நம்முடைய முகத்தில் ஏதேனும் முகப்பரு ஏற்பட்டால் அது நமக்கு மிகுந்த வேதனையை தரும். குறிப்பாக கோடை காலம் வந்துவிட்டால் நம்முடைய முகம் சற்று கருப்பாகவும் பொலிவிழந்தும் காணப்படும்.(How to remove pimples in tamil)நம்முடைய முகத்தில் உள்ள செல்கள் இறந்து விடுவதால் அது கருப்பாக முகத்திலே தங்கி விடுவதால் தான் இந்த பிரச்சனை வருகிறது. நம்முடைய முகத்தில் உள்ள முகப்பருவை நீக்கவும் முகத்தின் பொலிவு அதிகமாவும் இயற்கை முறையில் உடல்நல வல்லுநர்கள் கூறிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

how to remove pimples in tamil
how to remove pimples in tamil

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி .அப்படிபட்ட முகத்தில் ஏற்படும் முகப்பருவால் நம்முடைய முகத்தின் அழகு பாழாகிறது.இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடு மற்றும் நாம் உட்கொள்ளும் எண்ணெய் பொருட்களால் தான் என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இயற்கை முறையில் முகப்பருவை நீக்கலாம்:(How to remove pimples in tamil)

நம்முடைய அழகை பிரதிபலிக்கும் முகத்தில் ஏற்படும் முகப்பருக்களால் நம்முடைய அழகு பாழாகிறது. இதனை சரி செய்ய கடைகளில் பல ரசாயன பொருட்கள் இருந்தாலும் இயற்கை முறையில் சரி செய்வது நல்லது என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் செயற்கையாக தயாரிக்கும் ரசாயன பொருட்கள் வீரியம் மிக்க வேதி பொருட்களால் தயாரிக்க படுகின்றன. அதனை பயன்படுத்துவதால் முகத்தில் வேறுசில பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது அப்படிப்பட்ட இயற்கை வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க:(How to remove pimples in tamil)

முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளால் முகத்தில் ஏற்படும் வடுக்கள் நீங்காமல் நம்முடைய முகத்தின் சரும பொலிவை நீக்கிவிடுகின்றன. இதனால் நம்முடைய மனம் அதிகமாக வருத்தம் அடைகிறது. நாம் பயன்படுத்தும் இயற்கை பொருட்கள் ஒவ்வொரு சருமத்திற்கும் வேறுபடும். ஒரு சருமத்திற்கு உடனடியாக நிவாரணத்தை தரும் ஒரு சில சருமத்திற்கு சற்று காலதாமதமாகும்.எனவே நம்முடைய சருமத்திற்கு தகுந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கீழ்வரும் வழிமுறைகளில் உங்களுடைய சருமத்திற்கு தகுந்த வழிமுறைகளை பின்பற்றி முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி (How to remove pimples in tamil) முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ளுங்கள்.

ஆவி பிடிக்க வேண்டும்:
முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் இறந்த செல்களை நீக்க ஆவி பிடிப்பதும் ஒரு வழிமுறை. ஆவி பிடிக்கும் பொது நம்முடைய முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் உள்ள துளைகள் வழியாக எண்ணெய் பிசுக்களும் வெளியாகிவிடும் இதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

முட்டையின் வெள்ளை:
முட்டையின் வெள்ளையை பயன்படுத்துவதாலும் முகத்தில் உள்ள முகப்பருவை நீக்க முடியும். முட்டையை உடைத்து அதில் மஞ்சள் கருவை எடுத்துவிட்டு வெள்ளையை மட்டும் முகபரு உள்ள இடத்தில் தடவி 15நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

how to remove pimples in tamil
how to remove pimples in tamil

இயற்க்கை பொருட்கள்:

வேப்பிலை புதினா மருதாணி இவற்றை நன்றாக காய வைத்து அதனை பொடியாக்கி பாலில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்துவந்தால் முகத்தின் பொலிவு அதிகமாகும் அதே நேரத்தில் முப்பரு வருவதையும் தடுக்கும்.
சந்தன பொடியோடு தயிர் கடலைமாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அதனை முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் இவ்வாறு செய்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

தக்காளியை பயன்படுத்தும் முறை:

தக்காளியில் விட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தில் உள்ள வடுக்கள் மற்றும் முகப்பருவை நீக்குவதோடு முகத்திற்கு புது பொலிவை தருகிறது. மேலும் சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்களை நீக்கி புதிய சரும செல்களை உருவாக்குகிறது. தக்காளி பழத்தை நன்றாக அரைத்து குழபாக்கி அதனை முகத்தில் பூசிவிட்டு 15நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தக்காளியுடன் வெள்ளரிக்காய் அல்லது வெண்ணைப்பழம் சேர்த்து ஒன்றாக அரைத்து அதனை முகத்தில் பூசினால் அது ஒரு படலம் போல் செயல்பட்டு முகத்தில் உள்ள வடுக்கள் மற்றும் முகப்பருவை நீக்கும் மேலும் முகத்திற்கு புதிய பொலிவை தரும்.

how to remove pimples in tamil
how to remove pimples in tamil

மேலும் சில வழிமுறைகள் :(How to remove pimples in tamil)

  • சோற்றுக்கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி உள்ளது அதே போல் மஞ்சள் பயன்படுத்துவதால் முகத்திற்கு புது மலர்ச்சியை தரும்.எனவே சோற்றுக்கற்றாழை மற்றும் மஞ்சளை ஒன்றாக குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தின் இயற்கை ஈரப்பதம் மற்றும் பொலிவு மீண்டும் கிடைக்கும்.
  • வாழைபழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் சிறிது மைதா மாவை கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து நீரினால் கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.
  • பப்பாளி பழசாறு உடன் தயிர் அல்லது காய்ச்சாத பால் கலந்து அதனை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் உள்ள முகப்பரு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
  • இரவு தூங்கும் முன் புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் பயிற்றம் மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

மேலும் இது போல ஆரோக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related searches:

how to remove pimples in one day in tamil

beauty tips for pimples and dark spots in tamil

pimple treatment for oily skin in tamil

nattu maruthuvam for pimples in tamil

how to clear pimples naturally in tamil

Close