உடனடியாக பல் வலியை போக்கும் எளிய வழிமுறைகள் (teeth pain solution in tamil)
பல் வலி வந்துவிட்டால் நம்முடைய வேலைகள் அனைத்துமே தடையாகும்.சிறு வயதில் இருந்தே பற்களை பராமரிப்பது மிக அவசியமான ஒன்று(teeth pain solution in tamil).இயற்கையாகவே சிலருக்கு சிறு வயதில் இருந்தே பற்கள் வரிசையாகவும் வெண்மையாகவும் இருக்கும். ஆனால் வேறு சிலருக்கு அவ்வாறு அமைவதில்லை.நம்முடைய பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பல பல் வியாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நாம் உண்ணும் உணவு பொருட்களை நன்றாக அரைத்து உட்கொள்வதற்கு நம்முடைய பற்கள் கடினமாக இருக்க வேண்டும். அதற்க்கு நம்முடைய பற்களை பராமரிப்பது மிக அவசியம்.அப்படிப்பட்ட பற்களில் ஏற்படும் பல் வலிக்கான நிவாரணங்களை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறை:(teeth pain solution in tamil)
நம்முடைய உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நிவாரணம் காண்பது மிகவும் நல்லது. நம்முடைய பாடிகளிடம் கேட்டால் அதிகமான இயற்கை முறைகளை கூறுவார்கள். ஆனால் இப்போது அதனை பின்பற்றாமல் எல்லாவற்றிற்கும் மருத்துவர்களை அணுகுவதால் அவர்கள் சொல்வது தான் வேத வாக்காக எண்ணுகிறோம்.இப்போது பயன்படுத்து பார்ப்பசையில் சுவைக்காக அதிகப்படியான ரசாயன பொருட்களை கலப்பதால் பிற்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நம்முடைய பாட்டி காலத்தில் வேப்பங்குச்சியை கொண்டு தான் பற்களை சுத்தம் செய்வார்கள்.இதனால் பற்களுக்கு வலு அதிகமாக கிடைக்கும். ஆனால் இப்போது சுவைக்காக ரசாயனம் கலந்த பேஸ்ட் ஐ பயன்படுத்துகிறோம்.இதனால் பற்கள் வலுவிழந்து இருக்கின்றன.
பல் வலியை நீக்க வீட்டு வைத்தியம்:
குளிர்காலங்களில் அல்லது சாதாரணமாகவே குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்ளும் போது சிலர் வலியால் அவதிப்படுவார்கள். இதற்க்கு மருத்துவர்களை அந்த நேரத்தில் உடனடியாக அனுக முடியாது. இதற்க்கு நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பல் வலியை குணப்படுத்த முடியும்(teeth pain solution in tamil).நம்முடைய முன்னோர்கள் நம்முடைய சமையல் அறையை தான் மருத்துவமனையாக பயன்படுத்தினர் . அத்தகைய ஆரோக்கியமான இயற்கை முறையை பார்க்கலாம்.
கிராம்பு:
பல் வலியை நீக்க கிராம்பு மிகவும் உதவுகிறது. கிராம்பில் உள்ள ஆன்டி செப்டிக் தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகிறது.கிராம்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் வலி உணர்வை மறுத்து போக உதவுகிறது. இதனால் வலியை போக்கலாம்(teeth pain solution in tamil).
இதனை செய்வதற்கு ஒரு பஞ்சு உருண்டையை கொண்டு கிராம்பு எண்ணையை தொட்டு வலி ஏற்பாடும் ஈறுகளில் 2-3 முறை ஒரு நாளுக்கு தடவி வந்தால் பல் வலி நீங்கும்.இல்லையேல் 2-3 கிராம்பு எடுத்து அதனை வலி ஏற்படும் பற்களில் வைக்க வேண்டும். கிராம்பு அதனுடைய எண்ணையை வெளியேற்ற தொடங்கியவுடன் பல் வலி நீங்கும்.
Also check: ஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா?
உப்பு:(teeth pain solution in tamil)
நம்முடைய வீட்டில் உள்ள உப்பு நம்முடைய பல் வலியை நீக்க பயன்படுகிறது. உப்பில் உள்ள எதிர்ப்பு சக்தி ஈறுகளில் உள்ள அழற்சியை நீக்க உதவுகிறது.
இதற்க்கு தினமும் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு கலந்து நன்றாக கொப்பளிக்க வேண்டும், இவ்வாறு 3 முறை செய்ய வேண்டும் இதனால் பல் வலி நீங்கும்.
பூண்டு:

பூண்டில் உள்ள அல்லிசின் என்ற ரசாயன பொருள் பல் வலியை நீக்கும்.எனவே ஒரு பல் பூண்டை எடுத்து நசுக்கி வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி மெதுமாக குறையும்.அல்லது பூண்டு மற்றும் உப்பு கலந்த ஒரு பேஸ்ட் செய்து அதனை வலி உள்ள பற்களில் தடவ வேண்டும் இவ்வாறு செய்தால் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்(teeth pain solution in tamil).மேலும் பூண்டில் உள்ள ஆன்டி பயாடிக் ஆன்டி ஆக்சிடென்ட்,போன்ற மருத்துவ குணங்கள் உள்ளதால் பாக்ட்ரியா தொற்றுகள் இல்லாமல் பாதுகாக்கும் மேலும் பல் வலியை நீக்கும்.
வெங்காயம்:
வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு சக்திகள் மற்றும் கிருமி நாசினி உள்ளதால் பல் வலிக்கு இது நல்ல நிவாரணமாக அமையும்(teeth pain solution in tamil).இதற்க்கு வெங்காய துண்டுகளை நன்றாக மெல்ல வேண்டும் அல்லது சிறு வெங்காயத்தை நசுக்கி வலி உள்ள பல்லில் சிறுது நேரம் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் பல் வலி நீங்கும்.
கொய்யா இலைகள்:(teeth pain solution in tamil)
பல் வலியை நீக்கும் சிறந்த மருந்தாக கொய்யா இலைகள் உள்ளது.கொய்யா இலையில் குயர்செட்டின் என்ற வலி நிவாரணி உள்ளதால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.இதற்கு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.இல்லையேல் 2-3 கொய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரில் தினமும் கொப்பளித்தால் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
புதினா:

பல் வலியை நீக்குவதில் புதினா சிறந்த மருந்தாக உள்ளது. புதினாவில் வலியை நீக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது.மேலும் பாக்டீரியாவை நீக்கவும் இது பயன்படுகிறது.இதற்க்கு புதினா எண்ணையை வலி உள்ள பல்லில் தடவ வேண்டும். இல்லையேல் சிறிது புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் பல் வலி நீங்கும்.
பெருங்காயம்:

பல் வலியை நீக்கும் ஆயுர்வேத மருந்தாக பெருங்காயம் உள்ளது. இதில் உள்ள வலி நிவாரணி,மற்றும் அழற்சி எதிர்ப்பி பல் வலிக்கு நல்ல நிவாரணத்தை தரும்.இதற்க்கு சிறிதளவு பெருங்காயாம் எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்லது சிறிதளவு பெருங்காயத்தை எலுமிச்சை ஜூசுடன் கலந்து சுட வைத்து காட்டன் துணி அல்லது பஞ்சு உருண்டை மூலம் அதனை தொட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீலே உள்ள பெல் பட்டன் ஐ க்ளிக் செய்யவும்.
Related searches:
teeth tips in tamil language
gum problems in tamil
teeth blood problems in tamil
how to stop toothache pain at home
pal koocham in tamil
pal sothai patti vaithiyam