அயிலை மீன் குழம்பு

அயிலை மீன் குழம்பு :

ayila fish
ayila fish

அயிலை மீன் இதயத்திற்கு மிக நல்லது , கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட வேண்டும்.
மேலும் சக்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட்டால் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் .
அயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.

தேவையான பொருள்கள் :

  • அயிலை மீன் – 1/2kg
  • நல்லெண்ணெய்- 4 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • பெரிய வெங்காயம்- 2
  • தக்காளி – 2
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • பூண்டு – 4
  • கடுகு – அரை ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கறிவேப்பில்லை – 1 சிறிதளவு
  • மிளகாய் தூள் -2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
  • புளி – பெரிய எலுமிச்சை அளவு
  • மல்லிப்பொடி – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய்ப்பால் – 1 டம்ளர்

செய்முறை :

  • அயிலை மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . மீன் வெட்டாமல் தலை மற்றும் வாழ் பகுதியை மட்டும் வெட்டி கொள்ளவும்.

 

  • பின்னர் அதோடு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
    வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி கொண்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

 

  • புளியை எடுத்து ஒரு டம்பளர் நீரில் கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
    கடாயை அடுப்பில் வைத்து என்னை ஊற்றி கொள்ள வேண்டும்.

 

  • எண்ணெய்  நன்றாக காய்ந்த உடன் , கடுகு , சீரகம் , வெந்தயம் சேர்த்து கொண்டு நன்றாக தாளிக்கவும்.

 

  • பின்னர் அதோடு கறிவேப்பிலை , பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

 

  • இப்பொது அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் .

 

  • அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
    தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
  • அடுத்தபடியாக மீன் துண்டுகளை சேர்த்து , அதோடு தேங்காய் பாலையும் சேர்த்து போர்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

 

  • மீன் நன்றாக வெந்த உடன் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.

 

  • இப்பொழுது சுவையான அயிலை மீன் குழம்பு ரெடி .

 

Searches related to ayila fish

  • mathi fish
  • choora fish
  • ayila meen kulambu
  • ayila fish in tamil

 

 

Close