chicken 65 recipe – சிக்கன் 65 செய்வது எப்படி ?
சிக்கன் 65

சிக்கன் 65 பேர் கேட்டாலே சும்மா நாக்குல என்னமோ பண்ணுதுல ?
சிக்கன் சொன்னாலே எல்லாருக்குமே நியாபகத்துக்கு வரும் . நம்ம தென் இந்தியா ல ரொம்ப ரொம்ப அதிகமா கிடைக்கற சிக்கன். ரோடு ஓரத்துல கூட நெறய பாக்க முடியும் .இப்போ அந்த சிக்கென 65 எப்படி செய்றதுனு நாம பாக்கலாம் .
தேவையான பொருட்கள் :
- சிக்கன் – 1/2 கிலோ ( எலும்பு இல்லாமல் )
- இஞ்சி ,பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- குறு மிளகு தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சதூள் – 1 சிட்டிகை
- சீரகப்பொடி – 1/2 ஸ்பூன்
- சோள மாவு – 1 ஸ்பூன்
- அரிசி மாவு – 1 ஸ்பூன்
- முட்டை – 1
- பச்சை மிளகாய் – 4
- கறிவேப்பிலை – 1 கொத்து
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :

- முதலில் சிக்கனை நன்றாக கழுவ வேண்டும் .
- பின்னர் சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து ஊறவைக்கவும் 10 நிமிடம் .
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு கொஞ்சம் மற்றும் சோள மாவு ,முட்டை ,மிளகாய் தூள் , மிளகு தூள் , சீராக தூள் ,மஞ்சள் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- இப்போது ஊற வைத்த சிக்கனை எடுத்து சோள கலவையில் மாவில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலில் சிக்கனை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வைக்கவும்.
- என்னை காய்ந்தவுடன் அதில் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரித்து கொள்ளவும்.
- பின்னர் சிக்கனை எடுத்து எனில் பொறிக்கவும் .பொன்னிறமாக வரும் வரை .
- பொறித்த சிக்கனை தட்டில் எடுத்து வைத்து வெங்காயம் ,மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.
- இப்பொது சுவையான சிக்கன் 65 ரெடி.
Searches related to chicken 65 :
- chicken 65 gravy recipe
- chicken 65 recipe in tamil
- chicken 65 recipe video
- hyderabadi chicken 65 recipe
- chicken 65 recipe in tamil
- chicken 65 history
- chicken 65 recipe kerala style