தேங்காய் பூரணம் – coconut snacks
தேங்காய் பூரணம்

- ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை.
- சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
- இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
- அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ,
ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது. - இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான
- ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும்
அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். - இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
- தேங்காய்
- பச்சரிசி,
- பருப்பு,
- வெல்லம்,
- அவல்,
- எள்,
- ஏலக்காய்
- அழிஞ்சிமர குச்சி
செய்முறை :

- புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள்.
- ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும்.
- பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் நிறப்ப வேண்டும் .
- நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருகு வேண்டும் .
- பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூட வேண்டும் .
- வீட்டு வாசலில் ஒரு இடத்தில் மண் அடுப்பில் நெருப்பு மூட்டி
அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுட வேண்டும் . - ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் எடுத்து விட வேண்டும் .
- இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும்.
- ருசி பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள்.
Searches related to coconut snacks
- homemade coconut snacks
- simple coconut snacks
healthy coconut snacks - healthy coconut snacks recipes
- indian snacks with coconut
- coconut snacks
- coconut snack balls
- organic coconut snacks with cranberries