கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி?

கோங்கூரா சிக்கன் :

gongura-chicken
gongura-chicken

எப்போதும்  ஒரு சிக்கன் வருவல், குழம்பு சாப்பிட்டு போரடித்துவிட்டது நினைப்பவர்களா நீங்கள் ஓகே இன்னிக்கு நாம கொஞ்சம் டிஃபரண்டா ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் எப்படி செய்யலாம் என்று நாம் பார்க்கலாம்.
கோங்குரா என்பது ஒரு கீரை வகையைச் சார்ந்தது, அது மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன்                                  – அரை கிலோ
கோங்குரா                           – ஒரு கட்டு
பச்சை மிளகாய்                 –  4
வெங்காயம்                        – 2
இஞ்சி ,பூண்டு பேஸ்ட்      – 3 டீஸ்பூன்
தக்காளி                                – 2
மிளகாய்த்தூள்                   – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்                        – ஒரு டீஸ்பூன்
மல்லி தூள்                           – 2 டீஸ்பூன்
கரம் மசாலா                        –  ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள்                             –  ஒரு டீஸ்பூன்
எண்ணெய்                            – தேவையான அளவு
உப்பு                                        – தேவையான அளவு

செய்முறை :

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

gongura leaf
gongura leaf

பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி ,சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய் ,நறுக்கிய பெரிய வெங்காயம் ,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனோடு சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து கீழே இறக்கி நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலில் 2 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்,

சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியவுடன் நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சீரகத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

ஒரு டம்ளர் போற்றி பாத்திரத்தை மூடி வைக்கவும், பின்பு அரைத்துவைத்துள்ள கோங்குரா மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும், இரண்டும் நன்றாக சேர்ந்து 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.

இப்பொழுது அருமையான ,சுவையான கோங்குரா சிக்கன் ரெடியாகிவிட்டது.

இதனை தோசை சப்பாத்தி, பூரி, இட்லி, சாதம் என அனைத்திற்கும் சாப்பிடலாம்.

 

 

Searches related to chicken :

  • chicken recipes for dinner
  • easy chicken recipe
  • roast chicken
  • live chicken
  • chicken recipes healthy
  • chicken nuggets
  • fried chicken
  • chicken wings
Close