வித்யாசமான பாயசம் !

                              பாயாசம்

பாயாசம் என்றாலே  குழந்தைகள் விரும்பி குடிக்கும் ஒன்று.

பால் பாயாசம் ,சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் இதையே திரும்பத் திரும்ப குடித்து சிலர் வெறுத்துப்போய் இருப்பர். அவர்களுக்கு என்று இன்றைக்கு வித்தியாசமான பாயாசங்கள்-ஐ எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ப்ரூட் பாயாசம்

friut payasam
friut payasam

தேவையான பொருட்கள்:

கண்டன்ஸ்டு மில்க்    – அரை டின்
பால்                                  – ஒரு லிட்டர்
ப்ரூட்                                 – நறுக்கிய ஆப்பிள், திராட்சை, மாம்பழம், செர்ரி
சர்க்கரை                         – அரை கப்,
பாதாம் பருப்பு               – 15
முந்திரிப் பருப்பு           – 15
ரோஸ் வாட்டர்             – 3 டேபிள்ஸ்பூன்
கஸ்டர்டு பவுடர்           – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாதாம் பருப்பை சுடுநீரில் ஊற வைத்து  தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் முந்திரியையும் சேர்த்து அரை கப் பாலில் உறவைத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மீதம் உள்ள பாலில் அரைத்த விழுது ,கஸ்டர்ட் பவுடர் கலந்து கிளறவும்,  அதனுடன் சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறிக்கொண்டே நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்த பின்னர் பாத்திரத்தை இறக்கி வைத்து ஆறவைக்கவும். பின்னர ரோஸ் வாட்டர் சேர்த்து குளிர வைக்கவும்.
குளிர்ந்தவுடன் பழங்களை சேர்த்து பரிமாறவும்.

                           கேரட் பாயாசம்

carrot payasasm
carrot payasasm

 

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட்             – 1 கப்
காய்ச்சிய பால்              – ஒரு லிட்டர்
பருப்பு                              – 10
முந்திரிபருப்பு               – 10
ஏலக்காய்                        – 3
சர்க்கரை                         – அரை கப்
நெய்                                 – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் உரித்த பின்னர் முந்திரியுடன் சேர்த்து அரை கப் பாலில் ஊற வைத்து கொஞ்சம் நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.
ஒரு லிட்டர் பாலை முக்கால் லிட்டர் வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.

பாத்திரத்தில் நெய் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு மிதமான நெருப்பில் வதக்கவும்  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காய்ச்சியப் பாலில் முந்திரி விழுது சேர்த்து கேரட் கூழ் சேர்த்து நன்றாக வைத்துக் கிளறவும். பின்னர் பாத்திரத்தை இறக்கி வைக்கவும் ,சிறிது கேரட் துருவலை அதனுடன் லேசாக தூவி விடவும். சூடான கேரட் பாயாசம் ரெடி. இதனை குளுமை படுத்தியும் பரிமாறலாம்.

Searches related to payasam :

  • semiya payasam with condensed milk
  • semiya payasam with milkmaid
  • semiya payasam in tamil
  • sago payasam recipe
  • rice payasam recipe
  • how to make milk payasam
  • semiya payasam with jaggery
  • paruppu payasam
  • semiya javvarisi payasam
  • payasam rice
Close