இறால் ப்ரை செய்வது எப்படி ?

                                      இறால் ப்ரை(PRAWN FRY)

prawn fish
prawn fish

மீன்களில் அதிகமான ப்ரோட்டீன் சத்து கொண்ட மீன் இறால் , இது கடலில் கிடைக்க கூடியது . ஆனால் இது கொஞ்சம் விலை அதிகம் .

ஆனால் அதற்கு ஏற்ப சத்துக்களும் அதிகம் ,ஜிம் க்கு செல்பவர்கள் இதனை அதிகம் உண்ண சொல்வார்கள் .

அதுமட்டும் இல்லாமல் உண்பவர்களுக்கு எளிதாகவும் முள் இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

மருத்துவத்திற்கும் இறால் பயன் படுகிறது .இறால் 1/2 கிலோ

 

தேவையான பொருட்கள் :

 

  • இறால்(prawn) – 1/2 kg
  • பச்சை மிளகாய் 2
  • சின்னவெங்காயம் -7
  • இஞ்சிப் , பூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் -1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் -1/2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு,உளுந்து, -1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • பட்டை – 2
  • கிராம்பு -4

 

செய்முறை :

இறால்(prawn) மீனை முதலில் நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும் .

பின்பு சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயும் அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த உடன் கடுகு, உளுந்து, பட்டை ,கிராம்பு சேர்த்து வதக்கவும்,

பின்னர் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும் .

சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் .

பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும் .

கடைசியாக சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை(prawn) போடவும் .

கடைசியாக தண்ணீர் லேசாக தெளித்து உப்பு சேர்த்து மிதமான வேகத்தில் அடுப்பை வைத்து சிவக்கும் வரை வேகவைக்கவும்.

Searches related to prawn fry in tamil :

  • prawn in tamil
  • prawn recipes in tamil pdf
  • prawn 65 in tamil
  • prawn pepper fry in tamil
  • prawn thokku in tamil
  • eral varuval seivathu eppadi
  • crispy prawns fry
  • chettinad prawn fry
  • prawns fry masala
  • prawn fry kerala style
Close