Vadacurry- வடகறி செய்வது எப்படி ?

 Vadacurry- வடகறி செய்வது எப்படி ?

 

வடகறி (vadacurry)

vadacurry
vadacurry

நம்ம தென் இந்தியா ல ஒரு பேமஸ் ஆனா டிஷ் வடகறி ஒன்னு. அதுவும் சென்னை ல அதிகம்.
இது இட்லி ,தோசை ,பூரி ,பரோட்டா எல்லாத்துக்கும் சைடு டிஷ் செம்மையை இருக்கும்.
ஆனா இது எல்லாருக்கும் செய்ய தெரியாது .கவலைய விடுங்க .நம்ம பேஜ் ல வடகறி எப்படி செய்றதுன்னு சொல்றேன்.

தேவையான பொருட்கள் :

  1. கடலை பருப்பு -1கப்
  2. வரமிளகாய் -3
  3. சோம்பு -1 ஸ்பூன்
  4. உப்பு -தேவையான அளவு
  5. வெங்காயம் -1
  6. தக்காளி -2
  7. இஞ்சி ,பூண்டு விழுது -2 ஸ்பூன்
  8. மல்லி தூள் -1 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் -2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
  11. கொத்தமல்லி -சிறிது
  12. பட்டை -1
  13. கிராம்பு -1
  14. பிரியாணி இலை -1
  15. பச்சை மிளகாய் -1
  16. கறிவேப்பிலை -சிறிது

செய்முறை :

  • முதலில் பருப்பை ( ஒரு மணி நேரம் ஊற வைத்தது ) எடுத்து மிக்ஸில் போட்டும் வரமிளகாய் ,சோம்பு ,மற்றும் உப்பு சேர்த்து ,நர நர வென்று அரைத்து கொள்ளவும் .
  • பின்னர் வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிய சிறிய வடைகளை போட்டு பொன்னிறமாக தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு வாணலில் எண்ணையை ஊற்றி காய்ந்தவுடன் பட்டை , கிராம்பு,பிரியாணி இலை ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .
  • பின்னர் இஞ்சி , பூண்டு சேர்த்து வதக்கவும்,அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வாங்கவும்.
  • அதோடு ,தக்காளியை தோல் நீக்கி மிக்ஸில் அரைத்து சேர்த்து கொள்ளவும் .
  • பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

2 டாப்லர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் .

பின்னர் செய்து வைத்துள்ள வடைகளை சிறிது சிறிதாக கட் செய்து போட்டு ,மிதமான வெப்பத்தில் வ 5 நிமிடம் வைக்க வேண்டும் .

கொத்தமல்லி இலையை தூவி இரக்க வேண்டும்.

சுவையான வடகறி (vadacurry) ரெடி .

 

Searches related to vadacurry : 

  • vadacurry recipe in tamil
  • hotel vadacurry recipe in tamil
  • vada curry gravy in tamil
Close