சாமானியனின் காதல்
சாமானியனின் காதல்

என் பேரு சுரேஷ் டிப்ளமோ முடிச்சுட்டு நெட்ஒர்க் என்ஜினீயர் ஆ ஒர்க் பன்றேன்.என் ஊரு சேலம் .மிடில் கிளாஸ் பேமிலி வீட்ல அம்மா மட்டும் தான்,அப்பா கிடையாது ,ஒரு தங்கச்சி அவளுக்கும் கல்யாணம் ஆயிருச்சு .
டெய்லி ஒர்க் அதிகமா இருக்கும் காலை-ல போன நைட் ஒன்பது மணிக்குத்தான் வருவேன்.வாரத்துல ஒரு நாள் சண்டே மட்டும் தான் பிரண்ட்ஸ் மீட் பண்ணுவேன். இப்புடியே போயிடு இருந்துச்சு .
எங்க கம்பெனி ல பேங்க் ல கேமரா பிட் பண்றதுக்கு என்ன அனுப்புவாங்க ,அது சர்வீஸ் பண்ணவும் நான் தான் போவேன். அப்படி போகும் பொது அங்க இருக்கவங்கள்ட அதிகமா பேசமாட்டேன் ,ஆனா அங்க இருக்கற reception ல ஒரு பொண்ணு இருக்கும் அழகா இருப்பா ,ஆபீஸ் பத்தி பேசுனா நல்ல பேசுவேன் ஆனா கொஞ்சம் பர்சனல் ஆ பேச பயமா இருக்கும். இப்புடியே கொஞ்ச நாள் போச்சு ஒரு நாள் .
கண்டிப்பா அவ கிட்ட பேசணும் னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன் .அவளோட reception நம்பர் கு கால் பண்ணேன். நான் சுரேஷ் பேசறேன் பேங்க் கு வருவேன் ல கேமரா சர்வீஸ் பண்ண , இம்ம் சொல்லுங்க னு சொன்ன ,
நா கொஞ்சம் உங்க கிட்ட பேசணும் னு சொன்னேன் அதுக்கு அவ கொஞ்சம் பிஸி அப்புறம் பிரீ ஆயிட்டு கால் பண்ணவா னு கேட்டா ,ஓகே சொல்லிட்டேன் . அப்பறம் அன்னைக்கு ஈவினிங் ஒர்க் முடிச்சுட்டு கால் பண்ணா ,
ஏதோ பேசணும் சொன்னிங்க சொல்லுங்க னு சொன்னா . சும்மா தான் பேசணும் னு தோனுச்சு , அப்புறம் நாங்க பேசி பிரண்ட்ஸ் ஆயிட்டோம் . அவ கிட்ட போன் இல்ல அவங்க அம்மா போன் ல தான் பேசுவா.
அதனால அவளோட பர்த்டே கு ஒரு போன் வாங்கிட்டு கொண்டு பொய் கொடுத்துட்டேன் , கொஞ்ச நாள் நல்ல பேசிட்டு இருந்தோம் . ஒரு நாள் வெளிய போலாம் னு சொன்னேன் ,வர மாட்டேன்னு சொல்லிட்டா அப்புறம் பேசி
கோவிலுக்கு வர ஓகே சொல்லிட்டா .
பக்கத்துல இருக்க முருகன் கோவிலுக்கு போனோம் , அப்போ நான் பேசிட்டு இருக்கும் போதே , உன்ன எனக்கு புடிச்சு இருக்கு , கூட இருந்த நல்ல இருக்கும் ,
கல்யாணம் பண்ணிக்கணும் னு தோணுது அப்புடி,இப்புடி னு ஏதோ ஏதோ பேசிட்டேன்.
அவ இல்ல வேணாம் நீங்க வேற , நாங்க வேற ,சரியா வராது ,
அதுக்காக உங்க கிட்ட பேசாம லாம் இருக்க மாட்டேன் எப்பவும் போல பேசுவேன் னு சொல்லிட்டு போய்ட்டா .
ரெண்டு நாள் பேங்க் கு போகல போன் பேசவும் இல்லை . அப்புறம் பேங்க் கு போகும் போது நான் வாங்கி குடுத்த போன் என்கிட்ட கொடுத்துட்டா .
எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு , அவ கிட்ட சொன்னேன் லவ் பன்னலான பரவலா பேசாம மட்டும் இருக்காதா ,என்னால தாங்க முடியாது னு சொல்லிட்டு போன் அவகிட்டயே குடுத்துட்டு வந்துட்டேன் .
அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு என் லவ் accept பண்ணிட்டா ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ,அப்பா இறந்ததுக்கு அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு நான் சந்தோசமா இருந்த நாள் , மறக்க முடியாத நாள் , ஆனா ரெண்டு பேரு வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க நல்லாவே தெரியும் . இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கைல லவ் பண்ணிட்டு இருந்தோம்.
நான் எப்பவும் பேங்க் கு பக்கத்துல ஷாப் ல தான் டீ குடிப்பேன் , அப்புடி குடிக்கும் போது அவ நேரா கடைக்கு வந்தா , நானும் என்கிட்ட தான் பேச வரான்னு நெனச்சேன் , owner கிட்ட பேசுனா , என்னனு கேட்டதுக்கு இதுதான் எங்க ஷாப் இவரு எங்க அப்பா னு சொன்ன , அப்பறம் அவங்க வீட்லயும் கொஞ்ச விஷயம் தெரிஞ்சுருச்சு , அப்புறம் அவங்க அம்மா கிட்ட லாம் கொஞ்சம் பேச ஆரமிச்சேன் ,
அவங்க வீட்ல எப்போ கல்யாணம் பண்ணலாம் னு பேச ஆரமிச்சுட்டாங்க , ஆனா நான் எங்க வீட்ல அம்மா கிட்ட எதுமே சொல்லல , சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க . இப்போ எனக்கு 27 வயது , அம்மா எனக்கு 29 தான் கல்யாணம் பண்லாம் னு இருக்காங்க ,
ஆனா அவ வீட்ல உடனே பண்ணனும் னு சொல்றாங்க , செட்டில் ஆகிட்டு பண்ண நல்ல இருக்கும் னு கொஞ்சம் டைம் கேட்டு இருக்கேன் .
ஒரு நாள் நான் குளிக்கும் போது அம்மா என் purse எடுத்து பணம் எடுத்தாங்க அப்போ அவ போட்டோ பாத்துட்டாங்க , யாரு னு கேட்டாங்க ,நானும் லவ் பண்றேன்னு சொல்லிட்டேன் ,
எங்க அம்மா ரொம்ப பீல் பன்னிட்டாங்க அழுதாங்க , அப்பறம் ரெண்டு நாள் என்கிட்ட பேசவே இல்ல , ரெண்டு கழிச்சு அவங்க யாரு என்னனு கேட்டாங்க நானும் சொன்னேன் ,அவங்க வேற ஆளுங்க நமக்கு செட் ஆகாது னு சொல்ட்டாங்க.
என்னையும் மீறி அப்புடித்தான் பண்ணுவேன்னு சொன்ன நீயே பொய் பண்ணிக்கோ என்ன கூப்பிடாதானு சொல்லிட்டாங்க .
அப்புறம் 6 மாசம் போச்சு,வீடு வாங்கிட்டேன் அவ வீட்லயும் கல்யாணம் முடிச்சுரலாம் னு சொன்னாங்க , எனக்கு என்ன பண்றதுனு தெரில , எங்க அம்மா கிட்ட என் பிரண்ட்ஸ் கூட்டிட்டு பேசுனேன் ,அவனுகளும் லவ் marriage . கல்யாணம் நம்ம சந்தோசமா இருக்கத்தான் ஊருல இருங்கவங்களுக்காக இல்லனு அம்மா கு எடுத்து சொல்லி , ஒரு வழியா புரிய வெச்சுட்டோம் , அம்மாவும் சரி னு சொல்லிட்டாங்க .
இன்னும் 6 மாசத்துல எனக்கு கல்யாணம் .
உண்மையான காதல் எப்போவதுதான் சார் தோத்து போகும் ,எப்பவுமே தோற்காது .
அதனால கடைசி வரிக்கும் உண்மையா லவ் பண்ணுங்க .கல்யாணமும் பண்ணிக்கோங்க.
(மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாத்தான் இருக்கும்.)
-LOVE RAM
Searches related to tamil love story :
- tamil love story books
- short romantic love story in tamil
- love story in tamil for reading
- cute love story in tamil
- tamil sad love story
- heart touching love stories in tamil language
- tamil love story movies
- romantic love conversation in tamil