ஐஆர்டிசி  ரயில் முன்பதிவு பற்றிய சில தகவல்கள்

ஐஆர்டிசி (IRCTC)  ரயில் முன்பதிவு :

சில காலங்களுக்கு முன்னர் ரயிலில் பயணம் செய்வது குறைவாகத்தான் இருந்தது. பேருந்து கட்டணம் உயர்ந்த பின்னர் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
பேருந்து கட்டணத்தை விட ரயில் முன்பதிவு கட்டணம் குறைவாகவும் சரிசமமாகவும் இருப்பதினால்  ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க ஆசைப்படுகின்றனர். அதிலும் ரயில் பயணம்  சொகுசாகவும் இருப்பதனால் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

ரயில் பயணம் செய்ய விரும்புவோர் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்வது அவசியம், இல்லை என்றால் பயணம் செய்வது கடினம். அப்படி முன்பதிவு செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்ய நேரம் இல்லாததாலும் சில சமயங்களில் தவிர்க்கின்றனர்.

ஆகவே ரயில்வே துறை இதனை எளிமையாக்கும் விதமாக ஐஆர்டிசி (irctc)என்ற ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஒரு சிலருக்கு இதனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால உபயோகிப்பதில்லை.

எனவே ஐஆர்சிடிசி (irctc) ரயில் முன்பதிவு குறித்த சில முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம்.

IRCTC-Train
IRCTC-Train
 • அனைத்து ரயில்களில் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பாக தொடங்கிவிடும்.
 • முதலில் ஐஆர்டிசி ( irctc) இணையப்பக்கத்தை கூகுளில் சர்ச் செய்து உங்களுக்கு என்று ஒரு புதிய அக்கௌன்ட் ஐ ஓபன் செய்யவும் .  இது ஒரு பெரிய விஷயம் இல்லை .  ஈமெயில் அக்கௌன்ட் ஓபன் செய்வது போல உங்களின் தகவல்களைக் கொடுத்து ஐஆர்டிசி ( irctc) இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட்டை ஓபன் செய்து விடுங்கள்.

  IRCTC-train booking
  IRCTC-train booking
 • ஐஆர்சிடிசி (irctc) இணையதளத்தில் நீங்கள எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும்,புறப்படும் தேதி இவற்றை குறிப்பிட்டு சர்ச் செய்யவும். பின்பு புக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 • முன்பதிவு விண்ணப்பம் ஒன்று தோன்றும் இதில் ஆறு நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
 • விண்ணப்பத்தில் பயணியின் பெயர், வயது, பால், தகவல்களை கொடுத்து பூர்த்தி செய்யவும். புக்கிங் வெற்றிகரமாக செய்து விட்டால் ரயிலின் சீட் நம்பர், பெட்டியின் நம்பர் அனைத்தும் டிக்கெட்டில் வந்துவிடும்.
 • ஆர் ஏசி (RAC) என்று புக் செய்தால் உங்களுக்கு, படுக்கை வசதி, கிடைக்காது ரயிலில் உட்கார்ந்து மட்டுமே செல்ல முடியும். ஆனால் ரயில் புறப்படுவதற்கு முன்பு  , மற்ற பயணிகள் தங்கள் முன்பதிவை கேன்சல் செய்தால் உங்களுக்கு அந்த சீட் ஒதுக்கப்படும்.
 • ரயில் புறப்படுவதற்கு முன்னர் chart தயாரிக்கப்படும் அதில் முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பயணியின் விவரம்   இடம் பெற்றுவிடும். அவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
 • முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய விரும்பினால் சார்ட் தயாரிப்பதற்கு முன்பாகவே கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் பணம்  உங்கள் அக்கௌண்டிற்கு வந்துவிடும்.
 • ஒருவேளை சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு உங்கள் டிக்கெட் கேன்சல் செய்ய விரும்பினால் [email protected] எனும் முகவரிக்கு டிக்கெட் விவரம் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் ,பின்னர் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு உங்களது பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 •  சார்ட்டில் இடம்பெறாத பயணிகள் ரயிலில் பயணம் செய்யக் கூடாது , கேன்சல் செய்த அவரது ஆன்லைன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு பணம் திரும்பி அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுவிடும்.
 • முன்பதிவு யார் பெயரில் செய்யப்பட்டிருக்கிறதோ அவரின் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

Searches related to irctc :

 • irctc availability
 • irctc login id
 • irctc account login
 • irctc login mobile
 • irctc train enquiry
 • irctc new website
 • irctc pnr
 • irctc new login
Close