ஜியோ-வை நொறுக்க புதிய கூட்டணி!
ஜியோ-வை நொறுக்க புதிய கூட்டணி:
ஜியோ நிறுவனத்தை நொறுக்க 20 ஆயிரம் கோடியை முதலீடு செய்கின்றது வோடாபோன் மற்றும் ஐடியா கூட்டணி.

அம்பானியின் ஜியோ நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருவதால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வீழ்ச்சி ஆகிக் கொண்டிருக்கின்றன. எந்த ஒரு நிறுவனமும் ஜியோ உடன் போட்டி போட முடியவில்லை.
அம்பானியின் ஜியோ தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது இதனால் சில நிறுவனங்கள் கடையை மூடிவிட்டனர்.
இதனால் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் கூட்டணி ரூபாய் 20 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருக்கின்றது.
அம்பானியின் ஜியோ:
ஜியோ நிறுவனம் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பல சலுகைகளை வாரி குவித்து வருகிறது குறைந்த காலத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதன் சேவையிலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செய்து வருகிறது.
மூடுவிழா:
ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் ஜியோ வந்தபின்னர் கடும் வீழ்ச்சி அடைந்தன. அம்பானியின் ஜியோ நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் திவாலானது. இதனால் ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மூடுவிழா
கண்டன.
வோடாபோன் ,ஐடியா ,டொகோமோ , ஏர்டெல்:
எங்கள் செய்திகளை உடனுக்குடன் அறிய facebook பக்கத்தை கிளிக் செய்யவும்.

வோடபோன் , ஐடியா, டொகோமோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஜியோவின் வருகையால் பெரும் நஷ்டம் அடைந்தன. இதனால் இந்நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு புதிய விதிமுறைகளை கொண்டுவந்தன அது என்னவென்றால் மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 35 ரீசார்ஜ் செய்ய வேண்டும். நாள் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐடியா ,வோடபோன் கூட்டணி :
நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் வோடபோன் நிறுவனங்கள் கூட்டணி வைத்தன. இதனால் நஷ்டம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று நம்பினார்கள் ஆனால் தொடர்ந்து ஜியோ பல சலுகைகளை அளித்து வருகின்றது ,லாபத்தையும் குவித்து வருகின்றது.
இதனால் ஐடியா, வோடபோன் கூட்டணி புதிய பிளானை கொண்டுவந்துள்ளது.
20 ஆயிரம் கோடி முதலீடு:
வோடபோன் மற்றும் ஐடியா கூட்டணி நெட்வொர்க்கை பலப்படுத்தும் நோக்கத்துடன் 20,000 கோடி ரூபாயை அடுத்த 15 மாதங்களில் முதலீடு செய்ய உள்ளது என்று அந்நிறுவனத்தின் நிதித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் பங்குகளை வெளியிட்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட வோடாபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Searches related to jio
- jio login
- reliance jio recharge
- jio mobile
- jio career
- reliance jio wifi
- jio fiber
- jio store
- jio customer care