OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி?
OTP ஹேக்கிங் மோசடிகள்:
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆன்லைன் பேங்கிங் OTP மையபடுத்தியே பின்பற்றப்படுகிறது. இது இதற்கு முன்னர் இருந்த நடைமுறையை விட பாதுகாப்பானதாக இருக்கிறது என நினைக்கின்றனர்.
ஆனால் தற்பொழுது பலரையும் OTP தொடர்பான மோசடிகள் பாதித்துள்ளன இதில் பல லட்சங்கள் பணம் திருடப்பட்டுள்ளது.

OTP மோசடி எப்படி நடக்கின்றது என பார்ப்போம் ?
வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து பேசுவதைப் போல இந்த மோசடிகள் நிகழ்கின்றன முதலில் வங்கியில் இருந்து அழைப்பது போல ஒரு அழைப்பு வரும் அதில் ஒருவர் வங்கியில் பணி புரிபவர் போல பேசி தற்போதைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை புதுப்பிக்க வேண்டும் அல்லது அப்டேட் செய்ய வேண்டும் என கூறி பேசுவார்.
தற்போது ரிசர்வ் வங்கி பழைய கார்டுகளுக்கு பதிலாக EMV பொருத்திய கார்டுகளை அனைவரும் பெற வேண்டும் என அறிவித்துள்ளது. இது அந்த மோசடி கும்பலுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
இதனால் கார்டு மாற்ற வேண்டும் என்று கூறியவுடன் அனைவரும் எளிதாக நம்புகின்றனர். பழைய கார்டின் நம்பர் சி சி வி நம்பர், எக்ஸ்பயரி தேதி என அனைத்தையும் கொடுத்து விடுகின்றனர்.
சீகிரேட் நம்பரை கேட்டால் மாட்டிக் கொள்வார்கள். அதனால் அவற்றை அவர்கள் கேட்பதில்லை.
ஆனால் இந்த மூன்றையும் ஒன்றாக அளிப்பதும் மிகவும் ஆபத்தானது. மோசடிக்காரர்கள் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வெரிஃபை செய்ய சொல்லுவர். இங்கே தான் அவர்களின் மோசடியில் மாட்டிக்கொள்கின்றனர்.
அந்த sms இல் ஒரு லிங்க் வரும் அதை கிளிக் செய்தால் verify ஆகிவிடும் என்று கூறுவார்கள் ஆனால் அதை கிளிக் செய்தால் மால்வேர் ஒன்று இன்ஸ்டால் ஆகிவிடும்.

அந்த மொபைல்க்கு வரும் sms நேரடியாக மோசடி கும்பலுக்கு சென்றுவிடும்.
ஏற்கனவே உங்கள் கார்டின் தகவல்கள் அவர்களிடம் இருக்கிறது இப்போது OTP யை பெற்று விடுவார்கள் ,இதனால் அவர்கள் மிக எளிதாக பரிவர்த்தனையை செய்ய முடியும்.
இப்படி பலரின் கணக்குகளில் உள்ள பணம் திருடப்பட்டுள்ளது. இதில் படித்த ,படிக்காத மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கி பலமுறை சொல்வது ஒன்றுதான் அது உங்கள் கார்டு தகவல்களை யாரிடமும் கொடுக்க கூடாது . வங்கி ஊழியர்கள் இதைக் கேட்டு யாரும் அழைக்க மாட்டார்கள் என்பதுதான்.
எனவே உங்கள் கார்டு தகவல்களை யாராவது கேட்டால் சொல்ல மறுத்து விடுங்கள் இதை பின்பற்றினாலே வங்கி தொடர்பான மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.
அடுத்தபடியாக உங்களுக்கு சந்தேகம் வரும் sms களில் இருக்கும் link கை கிளிக் செய்யாதீர்கள் நமக்குத் தேவைப்படும் அப்ளிகேஷன் தவிர மற்றவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுமதி கொடுக்காதீர்கள்.
இப்பொழுது உங்கள் மொபைலில் நாம் sms அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கூட செட்டிங்கில் சென்று ஆப்ஸ் பகுதியில் உள்ள ஆப் பர்மிஷன் ல் பார்க்கவும்.
அதில் எஸ்எம்எஸ் தேவையில்லாத அப்ளிகேஷன்களுக்கு அனுமதியை நீக்கிக் கொள்ளுங்கள்.
இப்படி OTP மோசடிகள் ,UPI பாதிக்கும் மோசடிகள் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இருக்கும் சிக்கல்கள் ஆபத்துக்களை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணமாக இருக்கின்றது.
இவற்றை அரசாங்கமும் ,வங்கியும் தவறிவிட்டாலும் நாம்தான் இவற்றைப் பற்றி அறிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மோசடிக்காரர்கள் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத மக்களை குறி வைக்கின்றனர் அதுதான் அவர்களுக்கு மிக எளிமையானதும் கூட எனவே வாய்ப்பை அளிக்காமல் பாதுகாப்பாக இருப்பது நமது கடமை.
இதனைத் தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Searches related to tamil technology news :
- computer news in tamil
- new technology 2018 in tamil
- tamil tech websites
- technology news today
- tech in tamil app