ப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி ?
இன்று செல்போன் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. அதற்கு காரணம் செல்போன்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள்.
இன்று செல்பி மோகம் செல்போன் வைத்திருக்கும் மக்களிடம் அதிகரித்துவிட்டது.
எங்கு சென்றாலும் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

இன்று இருக்கும் செல்போன்களில் கேமராக்கள ப்ரொபஷனல் கேமராக்களுக்கு போட்டியாக இருக்கின்றன.
ஆனால் அவற்றை வைத்திருக்கும் சிலருக்கு அதை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியவில்லை.
எனவே இங்கு உங்கள் மொபைலில் உள்ளவை கொண்டு சிறப்பான புகைப்படம் எடுப்பது பற்றி காண்போம்.
போக்கஸ் மற்றும் எக்ஸ்போஷர் :

ஸ்மார்ட் போன்களில் புகைப்படம் எடுக்கும்போது பலருக்கு சிரமமாக இருப்பது புகைப்படம் ப்ளர் ஆகிவிட்டது என்பதுதான்.
இதற்குக் காரணம் நவீன கேமராவில் இருக்கும் ஸ்மார்ட் போக்கஸ் மற்றும் எக்ஸ்போஷர் ஆப்ஷன் இருப்பதுதான்.
நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு ஸ்க்ரீனில் நீங்கள் எந்த இடத்தை போக்கஸ் செய்ய வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் புகைப்படம் எடுத்தால் புகைப்படம் நன்றாக இருக்கும்.
எக்ஸ்போஷர் ஐ பொருத்தவரை சில போன்களில் மேனுவல் எக்ஸ்போஷர் ஆப்ஷன்கள் உள்ளன. எக்ஸ்போஷர் என்பது கேமராவிற்குள் அனுமதிக்கப்படும் ப்ளர் ஆகும்.
இருட்டான இடங்களில் அதிக லைட்டுகளை கேமராவிற்குள் அனுமதித்தால் அது அதிக வெளிச்சத்துடன் புகைப்படம் எடுக்க உதவும்.
வெளிச்சமான இருக்கும் இடங்களில் குறைவான வெளிச்சத்தை கேமராவிற்குள் அனுப்பினாள் அது சரியான வெளிச்சத்தில் புகைப்படத்தை எடுக்க உதவும். புகைப்படத்தை கிளிக் செய்யும் முன்பு மேனுவல் ஆப்ஷன் இருந்தால் அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
எச் டி ஆர் மோட் :
பெரும்பாலான போன்களில் இந்த ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனை படுத்தி எச்டி ரக படங்களை எடுக்கலாம் சில போன்களில் ஆட்டோமேட்டிக் option இருக்கிறது. இதை ஆன் செய்தாள் உங்கள் புகைப்படம் எடுக்கப்பட்ட பிரேம் எச் டி இல் இன்னும் சிறப்பாக தர முடியும் என்றால் அதுவே தானாக ஆணாகி கொள்ளும்.
ரூல் ஆப் தர்டு:

படம் எடுப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது அதாவது எந்த மாதிரியான புகைப்படத்திற்கு எந்த மாதிரியான பிரேம் வைக்க வேண்டும் என சில விதிகள் உள்ளன.இந்த விதியை மீறலாம் என்றாலும் ஆரம்ப காலத்தில் இதை மீறாமல் எடுப்பது சிறந்தது.
மேலே இருக்கும் படத்தில் உள்ள கோடுகளை நீங்கள் கவனித்தீர்களா இந்த கோடுகள்தான்ரூல் ஆப் தர்டு எனப்படும் விதிமுறை கோடுகள்.
இதில் செங்குத்தாக இரண்டு கோடுகளும் சாய்வாக இரண்டு கோடுகளும் உள்ளது.இந்த கோடுகளின் சந்திப்பு இருக்கும் பகுதிகளில் தான் நீங்கள் எடுக்க நினைக்கும் பொருளை ஃப்ரேமாக வைக்க வேண்டும்.அதற்கு நடுவே வைக்கக்கூடாது.

அதேபோல் நீங்கள் எடுக்க நினைக்கும் பொருள் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அந்தப் பக்கம் மற்ற பகுதி இருக்க வேண்டும் . எடுத்துக்காட்டாக புகைப்படம் எடுக்கும் பொருள் உங்களின் வலதுபுறம் நோக்கியபடி இருந்தாள் கேமராவில் ரூல் ஆப் தர்டு கோட்டின் இடதுபுற சந்திப்புகளில் ஏதேனும் ஒன்றில் அந்தப் பொருள் இருக்கும்படி செய்ய வேண்டும்.
ஒருவேளை அந்தப் பொருளின் look இடது புறம் நோக்கி இருந்தால் கேமராவின் வலது புற ரூல் ஆப் தர்டு கோடு சந்திப்புக்களின் பொருள் இருக்கும்படி செய்ய வேண்டும்.
இந்த விதி முறைகளை பின்பற்றினாலே சிறப்பான புகைப்படத்தை எடுக்க முடியும். இன்னும் இது போன்றுபல விதிகள் இருக்கின்றன .
பின்னர் செல்போனில் புகைப்படம் எடுப்பது குறித்து நிறைய தகவல்களை பெற்றிருப்பீர்கள் அப்பன் என்று தெரிந்தால் கண்டிப்பாக இதன் பின்பு எடுக்கும் புகைப்படங்களில் இதற்கு முன்னால் எடுத்த புகைப்படத்திற்கும் அதிக வித்தியாசம் உங்களால் காணமுடியும்.
Searches related to mobile photography :
- mobile photography ideas
- mobile photography photos
- mobile photography accessories
- mobile photography apps
- mobile photography course
- mobile photography tutorial
- mobile photography tips in tamil
- mobile photography images