நண்டு சூப் செய்வது எப்படி ?

நண்டு சூப் என்றதும் உங்கள் நாவின் எச்சில் ஊறுகிறதா ? நண்டு சூப் மருத்துவ குணம் நிறைந்தது.

nandu soup-crab
nandu soup-crab

நண்டு சூப் ஆனது சளி இரும்பல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து. கடல் நண்டை விட ஆற்று நண்டு மிக சுவையானதாக இருக்கும்.

கிராமங்களில் ஆற்று நண்டு, வயல் நண்டு , ஏரி நண்டு எனப் பல வகை நண்டுகள் கிடைக்கும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இவற்றைச் செய்வதற்கு எல்லோருக்கும் தெரிவதில்லை.

ஆட்டுக்கால் சூப் ,கோழி கால் சூப் கடைகளில் கிடைப்பது போல நண்டு சூப் கிடைப்பதில்லை.இதனால் நிறைய பேர் இதனை குடித்ததும் கிடையாது.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றி நண்டு சூப் நீங்களே வீட்டில் செய்து பருகுங்கள்.

நண்டு சூப் செய்ய தேவையான பொருட்கள் :

நண்டு                          – 4
சின்ன வெங்காயம்  – 5
பச்சை மிளகாய்        – 3
மிளகு                           – சிறிதளவு
தக்காளி                       – 2
கருவேப்பிலை          – ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

nandu rasam
nandu rasam

முதலில் நண்டினை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக தடவி கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும் . காய்ந்ததும் கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் .

நன்றாக வதங்கியவுடன் நண்டை எடுத்து வாணலியில் போடவும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். சிறிது வெந்தவுடன் மிளகு துளை போட்டு கிளறிவிடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலையைத் தூவி வானலை இறக்கி வைக்கவும்.

சூடான சுவையான நண்டு சூப் ரெடி.

 

Searches related to nandu soup :

  • crab pepper soup
  • nandu kulambu
  • nandu fry
  • nandu varuval
  • nandu gravy
  • nandu masala
Close