நிலவில் பருத்தி விவசாயம்-சாதித்ததா சீனா ?

நிலவில் பருத்தி விவசாயம் :

china-cotton-plant-in -moon
china-cotton-plant-in -moon

நிலவு பற்றி இன்று பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதில் பல தகவல்கள் கிடைத்தாலும் மனிதனுக்கு நிலாவின் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை.நிலவில் உயிர்கள் வாழ முடியுமா என பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த ஆராய்ச்சிகளில் ஒன்று சீனா செய்து வரும் விவசாயம் பற்றி ஆராய்ச்சி.

ஆம் பூமியை தவிர வேறு ஒரு கிரகத்தில் ,நிலப்பரப்பில் முளைத்த முதல் தாவரம் பருத்தி அது வளர காரணமாக இருந்த நாடு சீனா.

சீனா விண்வெளித்துறையில் பணி புரியும் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள பூமியிலிருந்து பார்க்க முடியாதபடி இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் இந்த சோதனைகளை நடத்தினர் .

இதற்காக அவர்கள் கடுகு, பருத்தி விதைகள் உருளைக்கிழங்கு, சில ஈஸ்ட் கொண்டு ஜனவரி 3 அன்று வெற்றிகரமாக நிலவில் இறக்கியது .இந்தக் கலன் 198 மீட்டர் உயரமும் 173 மீட்டர் விட்டமும் 2.6 கிலோ எடையும் கொண்டது.

இதில் தாவரம் வளர தேவையான தண்ணீர் ,காற்று ,மண் கொண்டது. இதோடு 2 சிறிய அளவிலான கேமராக்கள் பொருத்தப் பட்டது .விதைகள் வளர தேவையான நீரும் ஒளியும் சில கருவிகளின் உதவியோடு நடைபெற்றது.

அந்த கேமரா 170 கும் மேற்பட்ட புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
கேமரா மூலம் அனுப்பப்பட்ட படங்கள் ம பருத்தி விதை வளருவதை காட்டியது .
ஆனால் நிலவிற்கு அனுப்பப்பட்ட மற்ற தாவரங்கள் எதுவும் வளரவில்லை.இதனால் நிலவில் உயிரினங்கள் வாழ முடியும் ,விவசாயம் செய்யமுடியும் என சீனா நிரூபித்துள்ளது.

இந்த பெருமை சீனாவிற்கு மட்டுமே சொந்தம். அனால் இந்த மகிழ்ச்சியை சீனா ஒரு சில நாட்களே கொண்டாடியது .
நிலவில் வாழ்ந்து வந்த பருத்தி விதைகள் இறந்து விட்டன என சீனா அரசிற்கு சொந்தமான பத்திரிக்கை ‘சின்குவா’ ஆராச்சி முடிந்துவிட்டது என செய்தி அறிவித்துவிட்டது.

எனவே இதற்கு முன்னாள் நடந்த ஆராச்சி போலவே ,நிலவில் உயிர் வாழ தகுதி இல்லை என நிரூபணம் ஆகியுள்ளது .

உருளைக்கிழங்கு ,கடுகு அனைத்தும் அங்கு விதைத்த உடனே முடிந்துவிட்டன.
ஆனால பருத்தி் விதைகள் மட்டும் சிறிது காலம் தாக்கு பிடித்தது .எனவே சீனாவிற்கு சிறிது நம்பிக்கை வந்தது.

அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்திகள் பரவின அந்தப் பெருமிதம் அதிக நேரத்திற்கு கிடைக்கவில்லை. நேரங்களிலேயே பருத்தி விதைகள் மடிந்தது.

நிலாவில் ஒரு நாள் முடிவதற்கு பூமியில் 29 நாட்கள் ஆக வேண்டும். எனவே தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நடத்த அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியாது. இதனால் தாவரத்திற்கு வெப்பம் கிடைக்கவில்லை. செயற்கையாக வெப்பத்தைக் கொடுக்கும் கருவியை பருத்தி வைத்திருக்கும் பெட்டிக்குள் அமைக்காமல் விட்டதால் பருத்தி மடிந்தது.

 

Searches related to tamil news :

  • top Tamil news
  • world Tamil news
  • tamil news websites
  • tamil nadu news in Tamil
  • daily thanthi Tamil newspaper
  • national news in Tamil
  • vikatan news
  • flash news in Tamilnadu today
Close