கோவாவில் இனி நோ பார்ட்டி!

கோவா -இளைஞர்களின் கனவு :

இளைஞர்களின் நீண்ட நாள் கனவு கோவா செல்வது. பள்ளிப்பருவம் முதல் திருமணம் ஆகும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Goa beach
Goa beach

பார்ட்டி,கேளிக்கை போன்றவற்றிக்கு பிரபலமான ஊர் என்றால் கோவா கடற்கரையை தான் இளைஞர்கள் நினைக்கின்றனர். அதற்குக் காரணம், விதவிதமான மதுவும், பலவகையான உணவு, கடற்கரையோரத்தில் ,கேளிக்கை விடுதிகள், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என, பலவற்றை அனுபவிக்கத்தான்.

கோவாவிற்கு செல்பவர்கள் பொது இடங்களிலேயே மது அருந்துவதும் உணவு சமைத்து சாப்பிடுவதும் நடைமுறையில் இருந்தது.இதனால் கோவா கடற்கரையில் அசுத்தம் ஏற்படுவதாக அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
இதனால் இதனை தடுக்கும் நடவடிக்கையாக கோவா சுற்றுலாத்துறை ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தது இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருப்பதாக கோவாவின் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இதனால் கடந்த வியாழக்கிழமை அன்று இந்த சட்டம் கோவா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அந்த சட்டம் என்னவென்றால்,கோவாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், கடற்கரையோரம் மற்றும் பொது இடங்களில் மது அருந்த, உணவு சமைத்து சாப்பிடவும் தடைசெய்யப்பட்டுள்ளது, இவ்வாறு மது அருந்தினாலும், உணவு சமைத்து சாப்பிட்டாலும் அபராதம் விதிக்கப்படும்.

தனி நபராக இருந்தால்  2000 ரூபாய் அபராதமும் ,குழுவாக இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அபராதம் கட்ட தவறினால் 3 மாத சிறை தண்டனை என தண்டனை மிக கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் கூறுகையில் “எங்கள் கடற்கரையில் யாரும் மது அருந்த முடியாது ,மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல முடியாது, திறந்த விழிகள் உணவு சமைக்கவும் முடியாது என்றார்”.

இதனால் மது விற்பனையாளர்களும், சுற்றுலா பயணிகளும் ஒருவிதமான கலக்கத்தில் உள்ளனர்.

மது விற்பனையாளர்கள் இனிமேல் சுற்றுலா பயணிகள் வருகையும், அதனால் மது விற்பனையும் குறைந்து விடும் என அஞ்சுகின்றனர்.

சுற்றுலா பயணிகளும் இனிமேல் சுதந்திரமாக கொண்டாட முடியாது என வருத்தத்தில் உள்ளனர்.

 

 

Searches related to goa :

  • goa wiki
  • goa tourism
  • goa map
  • goa capital
  • goa language
  • goa city
  • goa beaches
  • north goa
Close