மச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா ?
மச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா ?

கோவா என்றாலே பசங்களுக்கு அதிக சந்தோஷம் ,வாழ்க்கைல எப்டியாச்சு ஒருவாட்டி போயிரணும்னு ஆசை.பள்ளி காலத்திலிருந்தே பக்காவாக திட்டம் போட்டு நண்பர்களை நம்பி கனவு கோட்டை கட்டி கடைசியாக கோட்டைவிட்டதுதான் மிச்சம் .
அதேகனவு கல்லூரி காலம் முடிந்தும் இன்று வரை நிறைவேறாமல் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர் . சிலபேர் அதிக பணம் தேவை என்பதாலும் கோவா போகும் திட்டத்தை தள்ளி போடுகின்றனர்.
பட்ஜெட் பிளான் :
கோவாவிற்கு ரயில் பயணம் செய்தால் மிகவும் குறைவான கட்டணம் மட்டுமே செலவு ஆகும் . கோவா சென்றவுடன் அங்கு சிறிய அளவிலான ரூம்கள் வாடகைக்கு அதிகம் கிடைக்கும் . உங்கள் நண்பர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உங்கள் அறைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும் .
உணவு பொருட்கள் சாப்பிட ,பிரட் ஆம்ப்லேட் ,பிரியாணி, போன்றவை விலை குறைவாக கிடைக்கும் . அங்கு சுற்றி பார்ப்பதற்கு கார் வசதி உண்டு.
அது மட்டும் இல்லாமல் பைக் உம் வாடகைக்கு கிடைக்கும் . ஒருநாள் முழுவதும் கார் வாடகைக்கு எடுத்து கொண்டு கோவாவில் உள்ள அணைத்து பீச் உம் சுற்றி பார்க்க முடியாது . ஆனால் விளையாடுவதுற்கு ,ஒரு சில பீச் உண்டு அங்கு மட்டும் சென்று வரலாம்.
உங்கள் வெளித்தோற்றம் முக்கியம்:
கோவாவிற்கு இந்தியர்கள் மற்றும் வருவதில்லை , வெளி நாட்டு மக்களும் அதிக அளவில் வருகின்றனர் .இதனால் உங்கள் ஆடை உங்களை பற்றி பேசும் .
கோவாவிற்கு செல்கிறோம் என்ற ஆர்வத்தில் சிலர் எல்லா துணிகளையும் எடுத்து மூட்டையை கட்டி கொள்கின்றனர் . ஆனால் அது எதுவுமே தேவை தபடாது , காரணம் அங்க போட்டு கொள்ள அரைக்கால் வரை உள்ள டவுசர் ,பனியன் , சன் கிளாஸ் ,இதுவே இரண்டு அல்லது மூன்று செட் எடுத்து வைத்து கொள்ளவும்.
கோவா விற்கு செல்ல மிக இறுக்கமான ஆடைகளை எடுத்து செல்லாதீர்கள். மிக இலகுவான ஆடைகளை எடுத்து செல்லுங்கள் . பீச் ட்ரெஸ் என்றே இப்பொது தனியாக கடைகளில் கிடைக்கின்றன .
சன் கிளாஸ் , தொப்பி என போட்டு கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பார்ட்டி கொண்டாட்டம் :
கோவா வில் முக்கியமான ஒன்று இரவுகளில் நடக்கும் நடனம் ,நிகழ்ச்சிகள் .இவற்றிக்கு செல்லவேண்டுமானால் , நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் . 500 முதல் .5000 வரை வசதிக்கு ஏற்ற கிளப் உண்டு .இந்த கிளப் களில் ஜோடியாக உங்கள் லவ்வர்ஸ் உடன் செல்ல தனியாகவும் கிளப் இருக்கின்றன .

இது மட்டும் இல்லாமல் இரவு நேரத்தில் தான் திருவிழா போல காட்சி அளிக்கும் . பீச் ஓரத்தில் வரிசையாக லைட் டேபிள் போட்டு அனைவரும் பொழுதை கழித்து கொண்டு இருப்பார்கள் .
குடிபானகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் , ஆனால் கிளப் களில் குடித்தால் பட்ஜெட் எகிறிவிடும் . எனவே பானங்களை
வாங்கி கொண்டு ரூம்களில் வைத்து அருந்துவது உங்கள் பணத்தை மிச்ச படுத்தும் . (குடி பழக்கம் உடல் நலத்திற்கு கேடு )