சென்னைக்கு பின்னடைவு -டெல்லி நம்பர் 1
ராஜஸ்தான் vs டெல்லி :
ஜெய்பூரில் நடந்த 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெடுக்கு 191 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காண்டாகி அடித்து நொறுக்கிய பண்ட் :
அதிரடியில் மிரட்டிய பண்ட் 36 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 78 ரன்கள் அடித்து மிரட்டினார்.
உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ரிஷப் பண்ட் கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது என்றார்.
பண்ட் கூறுகையில், ‘அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உலகக்கோப்பை அணிக்கான
தேர்வில் இடம் பெறாதது குறித்து பொய் சொல்ல விரும்பவில்லை. கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது.’ என்றார்.
டக் – அவுட் :
இப்போட்டியில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டர்னர் முதல் பந்திலேயே ‘டக்’ அவுட்டானார். இதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5வது போட்டியில் டர்னர் ‘டக்’ அவுட்டானார்.
முன்னதாக அசோக் டிண்டா, ராகுல் சர்மா, கவுதம் காம்பிர், பவான் நேகி, சார்துல் தாகூர் ஆகியோர் தொடர்ச்சியாக ஐபிஎல்., அரங்கில் மூன்று முறை ‘டக்-அவுட்’டாகியுள்ளனர்.
சென்னைக்கு பின்னடைவு :
தொடரின் 40வது லீக் போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஐபில்(IPL) புள்ளி பட்டியல் :
T | P | W | L | T | NR | Pts | NRR |
DC | 11 | 7 | 4 | 0 | 0 | 14 | 0.181 |
CSK | 10 | 7 | 3 | 0 | 0 | 14 | 0.087 |
MI | 10 | 6 | 4 | 0 | 0 | 12 | 0.357 |
SRH | 9 | 5 | 4 | 0 | 0 | 10 | 0.737 |
KXIP | 10 | 5 | 5 | 0 | 0 | 10 | -0.044 |
KKR | 10 | 4 | 6 | 0 | 0 | 8 | -0.013 |
RR | 10 | 3 | 7 | 0 | 0 | 6 | -0.47 |
RCB | 10 | 3 | 7 | 0 | 0 | 6 | -0.836 |
தோனி விளக்கம் :
சென்னை அணி, பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை சந்தித்தது கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 24 ரன்கள் எடுத்தார். இந்நிலையில சிங்கிள் எடுக்காதது ஏன் என தோனி விளக்கம் அளித்துள்ளார்
‘களத்தில் நான் அதிக பந்துகளை எதிர்கொண்டிருந்தேன். 12 பந்தில் 40 ரன்கள் தேவைப்படும் பட்சத்தில் நிச்சயம் பவுண்டரிகள் தேவை.
அதனால் ஒருசில பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் . அடுத்த பந்தில் அதை சரிசெய்யும் விதமாக பவுண்டரிகள் அடிப்பது தான் முக்கியம் .
அதே நேரம் பிராவோ அப்போது தான் களமிறங்கியுள்ளார். புது பேட்ஸ்மேன்களுக்கு இக்கட்டான நிலையில் பவுண்டரிகள் அடிப்பது கடினம். அதனால் அந்த பொறுப்பையும் நானே ஏற்றுக்கொண்டேன்.
முதல் குவாலிபயர், சென்னையில் :
தொடரின் ஃபைனல் போட்டி நடப்பு சாம்பியன் அணி என்ற அடிப்படையில் சென்னையில் நடக்கயிருந்தது. ஆனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்,
முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஐ, ஜே, கே., கேலரிகள் கடந்த 2012 முதல் தடைவிதிக்கப்பட்டதால்.
நாக் அவுட் போட்டிக்கு முதல் இரண்டு இடத்துக்குள் சென்னை அணி வரும் பட்சத்தில் முதல் குவாலிபயர் போட்டி சென்னையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மே 7 முதல் குவாலிபயர், சென்னை
- மே 8 எலிமினேட்டர், விசாகப்பட்டினம்
- மே 10 இரண்டாவது குவாலிபயர், விசாகப்பட்டினம்
- மே 12 ஃபைனல், ஹைதராபாத்
இன்றைய போட்டி :
ஐபில் தொடரின் இன்று நாடாகும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் . ஹைட்ரபாத் அணியும் மோதுகின்றன . இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் ,சென்னை அணி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும் ,
அடுத்தடுத்த போட்டியில் தோல்வி பெற்றதால் இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று சென்னை அணி உள்ளது.
Searches related to ipl
- ipl table in tamil
- ipl teams in tamil
- ipl highlights in tamil
- ipl schedule in tamil
- ipl wiki in tamil
- vivo ipl 2018 in tamil
- ipl tickets in tamil
- ipl auction in tamil
- ipl 2019 in tamil
- ipl today in tamil