உனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா
சென்னை vs பெங்களூரு(IPL) :
பெங்களூருவில் IPL நடந்த 39வது லீக் போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெடுக்கு 161 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய சென்னை அணிக்கு கேப்டன் தோனி அரைசதம் அடித்து மிரட்ட, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியடைந்தது.
சென்னை மரண பீல்டிங்(IPL) :
தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்கள் பீல்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் .போட்டியின் 17வது ஓவரை சென்னை வீரர் இம்ரான் தாஹிர் வீசினார்.
3வது பந்தை எதிர்கொண்ட ஸ்டோனிஸ், பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்றார். அதை பவுண்டரி லைனில் நின்ற டுபிளசி, மிரட்டலாக தடுத்ததோடு, அருகில் இருந்த ரெய்னா விடம் சிறப்பாக பாஸ் செய்தார். அதை ரெய்னா பிடிக்க, ஸ்டோனிஸ் விக்கெட்டை இழந்து பரிதாபமாக வெளியேறினார்.
சென்னை அணியின் சிறந்த பீல்டராக திகழும் டுபிளசி, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 கேட்ச் பிடித்து மிரட்டியுள்ளார். இவர் பிடித்த கேட்ச்சை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தலயின் அதிரடி :

இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வாட்சன் (5), டுபிளசி (5), ரெய்னா (0) அடுத்ததடுத்து வெளியேறினர். தொடர்து வந்த கேதர் ஜாதவ் (9) ஏமாற்றினார்.
பின் இணைந்த தோனி, ராயுடு அணியை சரிவில் இருந்து மீட்டது. பவுண்டரி, சிக்சர்களுமாக வெளுத்த தோனி, அணியின் ரன் வேகத்தை அதிகரித்தார்.
சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்தோனி 24 ரன்கள் எடுக்க சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
கடைசி ஓவரில் அடித்த இமாலய சிக்ஸ் மைதானத்தின் வெளியே சென்றது . இந்த ஐபில் தொடரில் இதுவே அதிக படியான தூரம் .
சென்னை நம்பர்-1:
தொடரின் 39வது லீக் போட்டியின் முடிவில், சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி 6 புள்ளிகள் பெற்றது. சென்னை அணி தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.
அடுத்தடுத்த போட்டியில் தோற்றாலும் சென்னை இடத்தை அசைக்க கூட முடியவில்லை .
ஐபில்(IPL) புள்ளி பட்டியல்:
T | P | W | L | T | NR | Pts | NRR |
CSK | 10 | 7 | 3 | 0 | 0 | 14 | 0.087 |
MI | 10 | 6 | 4 | 0 | 0 | 12 | 0.357 |
DC | 10 | 6 | 4 | 0 | 0 | 12 | 0.16 |
SRH | 9 | 5 | 4 | 0 | 0 | 10 | 0.737 |
KXIP | 10 | 5 | 5 | 0 | 0 | 10 | -0.044 |
KKR | 10 | 4 | 6 | 0 | 0 | 8 | -0.013 |
RR | 9 | 3 | 6 | 0 | 0 | 6 | -0.474 |
RCB | 10 | 3 | 7 | 0 | 0 | 6 | -0.836 |
இன்றைய IPL போட்டி :
நாடாகும் போட்டியில் ராஜஸ்தான் அணியும் , டெல்லி அணியும் மோதிக்கின்றன .
Searches related to ipl
- ipl table in tamil
- ipl teams in tamil
- ipl schedule in tamil
- ipl wiki in tamil
- vivo ipl 2018 in tamil