டான் ரோகித் சர்மா!

மும்பை vs டெல்லி :

ஐபில் தொடரின் லீக் போட்டியில் நேற்றைய போட்டியில் மும்பை அணியும் ,டெல்லி அணியும் மோதின .டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது . பேட்டிங் செய்த மும்பை அணி ரோகித் சர்மா (30), டி காக் (35), ஹர்திக் பாண்டியா (32), குர்னால் பாண்டியா (37*) ஆகியோர் கைகொடுக்க, மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய டெல்லி அணி சகார் சுழலில் தடுமாறியது. அந்த அணியில், பிரித்வீ ஷா (20), தவான் (35), அக்‌ஷர் படேல் (26), மோரிஸ் (11) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை.
டெல்லி அணி 20ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டும் எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடைசி முன்று ஓவர்கள் :

நாங்கள் பவுலிங் செய்த போது போட்டியில் கடைசி 3 ஓவர் தான் போட்டியின் தலையெழுத்தையே மாற்றியதாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

மிஸ்ரா சாதனை :

டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, ஐபிஎல்., அரங்கில் தனது 150வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல்., அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் .

டான் ரோகித் சர்மா!

இதுவரை 181 ஐபிஎல்., போட்டியில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா, 4716 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, இந்திய அணிக்காக 2331 ரன்கள் எடுத்துள்ளார் ரோகித் சர்மா.
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்த போது, டி-20 அரங்கில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி ஆகியோருக்கு பின் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் ரோகித் சர்மா. 

TPWLTNRPtsNRR
CSK97200140.101
MI96300120.442
DC95400100.146
KXIP9540010-0.015
SRH8440080.549
KKR8440080.35
RR826004-0.589
RCB817002-1.114

இன்றைய போட்டி :

இன்றைய ஐபில் லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் , பணம்களுரு அணியும் மோதுகின்றன . இந்த போட்டியில் ஆவது பெங்களூரு அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

Searches related to ipl

  • ipl table in tamil
  • ipl teams in tamil
  • ipl highlights in tamil
  • ipl schedule in tamil
  • ipl wiki in tamil
  • vivo ipl 2018 in tamil
  • ipl tickets in tamil
  • ipl auction in tamil
  • ipl 2019 in tamil
  • ipl today in tamil
Close