கேரளாவில் இப்படி ஒரு இடமா!

கேரளா சுற்றுலா :

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வீடு ,வேலை ,வீடு ,வேலை என்றே இருப்பார்கள். வாரத்தில் ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். அதனால் அவர்களுக்கு டென்ஷன் இருக்கும் . விடுமுறை நாட்களில் எங்கு செல்வது என்பதே தெரியாது. அப்படி சென்றாலும் நம் பக்கத்தில் இருக்கும் கேரளாவிற்கு அடிக்கடி செல்வோம். ஆனால் பார்த்த இடத்திற்கே அடிக்கடி போக வேண்டுமா என தோன்றும். ஆனால் கேரளாவில் யாருக்கும் தெரியாமல் அதிகமான சுற்றுலா இடங்கள் இருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

நாம் இப்பொழுது பார்க்க வேண்டியது கேரளாவின் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்கக்கூடிய சுற்றுலா இடங்கள்.
வெளிநாட்டினர் வந்தாலும் மிஸ் பண்ணாமல் பார்க்கக் கூடிய இடங்கள் என ஒரு சில இடங்கள் இருக்கின்றது.

கொச்சி -கும்பாலங்கி :

kumbalangi
kumbalangi

கொச்சியில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறு தீவு போன்ற இந்தக் இடம் தான் இந்த கும்பாலங்கி.

இது அமைதியான நீர்த்தேக்கத்தை கொண்டுள்ள அழகான தீவாகும்.
படகுச் சுற்றுலாவும் மீன் பிடிப்பதற்கும் ஏற்ற அம்சங்களுடன் இது திகழ்கிறது. இங்குள்ள அமைப்பிற்காக இது உலக அளவில் பேசப்படும் ஒரு இடம்.

ரயிலில் செல்பவர்கள் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு ஆட்டோ அல்லது பேருந்து மூலம் செல்லலாம்.

குமரகோம்-வேம்பநாடு ஏரி :

kumarakom
kumarakom

இப்பொழுது அதிக அளவில் பிரபலமாகி வரும் கேரளாவின் சுற்றுலாத் தளங்களில் இந்த வேம்பநாடு ஏரி ஒன்று.
படகு சவாரி செய்வது அனைவருக்கும் பிடிக்கும் ,படகு போட்டியை கான அதிகப்படியான மக்கள் வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த இடமே விழாக்கோலம் கொண்டிருக்கும்.

இந்த இடத்திற்கு செல்வதற்கு கோட்டயம் ரயில் நிலையத்தில் இறங்கி சுமார் 14 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

வயநாடு-செம்பரா சிகரம் :

chembra-vayanad
chembra-vayanad

பச்சை வண்ண ஆடை கட்டிய இயற்கை தேவதைக்கு முன்னாள் இந்த உலகில் எதுவும் நிகராகாது என்பதற்கு இந்த ஒரு இடம் உதாரணம் போதும்.
இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 மீட்டர் உயரத்தில் உள்ளது.

கேரளாவில் ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள் இந்த இடத்தை தான் அதிகமாக விரும்புவார்கள்.
இந்த மலையின் நடுவே ஒரு சிறிய ஏரி ஒன்று இருதயம் வடிவில் அமைந்துள்ளது.

இதனை இருதயத் தடாகம் என்று அழைக்கின்றனர்.

இந்த மலையின் உச்சிக்கு செல்ல சுமார் 3 மணி நேரம்ஆகும்.

இந்த மலையின் உச்சிக்கு சென்றால் மேகங்கள் உங்கள் தலையை தடவிக் கொடுக்கும்.

ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த இடத்துக்கு செல்வதற்கு மேப்படி வனத் துறையினரின் அனுமதி மிகவும் அவசியம். பூச்சிக்கொல்லி கிரீம் ,லோஷன் போன்றவை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

ஆலப்புழா -மராரி பீச் :

marari-beach
marari-beach

ஆலப்புழா வில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தக் கடற்கரை பெரும்பாலோர் கண்ணில் தென்படுவதில்லை.
ஆலப்புழா ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ அல்லது டாக்ஸி எடுத்து மராரி கடற்கரைக்கு எளிதாக சென்று விடலாம்.
இந்தக் கடற்கரையை “ஹாமோக் மீச்” என்றும் அழைப்பார்கள்.
இந்தக் கடற்கரை மிகவும் அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்கும், மாலை வேலையில் கடற்கரை ஓரத்தில் அலைகள் உங்கள் பாதத்தை இலேசாக தழுவிச் செல்லும்.

 

 

Searches related to kerala tourist place :

  • kerala tourist places map with distance
  • kerala tourist places photo gallery
  • munnar kerala tourist places
  • kerala tourist places list in tamil
  • tourist places in kerala with pictures
  • kerala tourist places district wise
  • tourist places in kerala for 2 days
Close