நான் வீழ்வேனென்று நினைத்தாயோ-தோனி
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ -தோனி
இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலியா எதிரான ஒருநாள் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. சாகுல் இன்று சிறப்பாக பந்து வீசினார் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றுள்ளார்.
தோனி கடந்த 2011ஆம் ஆண்டு 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் மட்டுமே அடித்தார் தோனியின் வேகமும் குறைந்தது .
இதனால் தோனியின் மீது கடும் விமர்சனம் வந்தது . அவரது அனுபவமே அவரை அணியில் வைத்துள்ளது என பலர் கூறிவந்தனர். ரசிகர்கள் அவரின் பழைய ஆட்டத்தை காத்திருந்தனர். ஒரு அரைசதம் ஆவது அடித்தால் போதும் என நினைத்திருந்தனர்.
இது போதுமா குழந்தாய்?

2019 இன் தொடக்கத்திலேயே தோனி வேட்டையை ஆரம்பித்துள்ளார். அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல ஒன்றுக்கு 3 அரைசதம் அடித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று போட்டிகளிலும் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
தொடர் நாயகன்!
ஆஸ்திரேலியா தொடரின் மூன்று போட்டிகளிலும் சேர்த்து அதிக ரன்களை அடித்து பேட்டிங் திறமை காட்டியுள்ளார் .இதனால் விராத், ரோஹித் அடித்த ரன்களை விட அதிக ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் அவர் நாயகன் விருதையும் பெற்றார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் வரிசையில் தோனி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் இவர் மூன்று அரைசதங்கள் உடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு போட்டிகளிலும் நாட் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்துள்ளார்.
தோனியின் பதில்!
இதன் மூலம் தோனி தன் பேட்டிங்கின் மூலம் தனது எதிரிகளுக்கு பதிலளித்துள்ளார். இனி தோனியின் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Searches related to viral news :
- viral news tamil
- today viral news in tamil
- viral news jalgaon
- sakshi dhoni
- dhoni age
- msd career