டிக் டொக் கிற்கு தடை !
சமூகவலைத்தளங்களில் மோகம்:
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூகவலைதளங்களில் முழு நேரத்தையும் செலவு செய்கின்றனர்.
மொபைல் டேட்டா இலவசமாக வந்த பின்னர் சமூக வலைதளங்களின் மோகம் இன்னும் அதிகமாயின.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு பார்த்தால் , ஜிமெயில் ,ஆர்குட், போன்றவைகள் மட்டுமே தகவல் பரிமாற்றத்திற்கு பயன்பட்டன. பின்னர் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
சிறிது காலம் கழித்து facebook வந்தது பெரும்பாலோர் இதனைப் பயன்படுத்தினர், அதற்கு அடுத்தபடியாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம், இளைஞர்கள் சமூகவலைதளங்களில் பொழுதை கழித்தனர். அதன் பின்னர் whatapp போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வந்தன. இவற்றையும் மக்கள் அதிகமாக பயன்படுத்தினர். இன்று ட்ரெண்டிங்கில் வந்திருப்பது் tiktok செயலி.

டிக் டொக் -ஏன் அடிமையானார்கள்?
டிக் டொக் என்னும் செயலி தற்போது இளைஞர்கள் ,குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அப்படி என்னதான் இதில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா.
பாடல் ,வசனம் போன்றவற்றிற்கு ஏற்ப தங்கள் நடிப்புத் திறமையை காட்டி சமூக வலைதளங்களில் பகிர முடியும். இதனால் தங்களின் முகம் பிரபலமாகின்றன. இதற்கு சிலர் அடிமையாகவே ஆகின்றனர்.
கலாச்சார சீரழிவு!
இந்த செயலியை பெண்களும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் சிலர் அதிகமாக லைக்ஸ் வாங்க வேண்டும், பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடையுடன் நடிக்கின்றனர்.
முதல் இரவு முதல் , கருமாதி வரை அனைத்தையும் இதில் செய்து பரப்புகின்றனர். இதனால் பல பெண்களும் கயவர்களிடம் சிக்கி கொள்கின்றனர். இது போகப் போக எங்கு சென்று முடியும் என்று பயமாக இருக்கிறது.
இது ஒருவித அழுத்தத்தையும் தருகிறது.
எப்படியாவது நாம் அனைவரின் கவனத்தையும் பெற்றுவிட வேண்டும் என்று அழுத்தம் தருகிறது. எனது நண்பர்கள் ,உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரும் இதில் கலக்கி வருகிறார்கள். நாம் மட்டும் சும்மா இருந்தா எப்படி என்று ஒரு அழுத்தம் ஏற்பட்டு செய்கின்றனர்.
இதன்மூலம் சிலருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்து அதுவும் வைரலாகி ஆகி விடுகிறது.
இதனால் நமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்த எல்லைக்கும் போகிறார்கள். இதுதான் இந்த செயலியின் மிகப்பெரிய பிரச்சனை.
சில ஆபாச வலைதளங்களில் Tiktok வீடியோக்களை பரப்புகின்றனர். இந்த வீடியோக்கள் அவர்கள் மூலமே தரப்படுகின்றன என அறியாமல் அரைகுறை ஆடையுடன் வீடியோ விடுகின்றனர்.
டிக் டொக் தடை!
இதற்கிடையில் இந்த செயலினை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நமது தொழில்நுட்ப அமைச்சரும் இந்த செயலியை கண்டிப்பாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இது நமது கலாச்சார சீரழிவுக்கு பெரும் கேடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதரவு!
ஒரு சிலரோ சட்டத்திற்கு எதிராக இல்லாத இந்தTiktok கிற்கு தடை விதிப்பது தவறானது. மக்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். போதிய விழிப்புணர்வு இல்லாததால் இவ்வாறு் செய்கின்றனர்.
இன்று இதை தடை செய்தாலும், நாளை அது வேறொரு பெயருடன் வரும்.
எது வந்தாலும் நாம் முழு கவனத்துடன் இருப்பது நமக்கு நல்லது.
Searches related to tik tok
- tik tok musically
- tik tok download
- tik tok app
- tik tok videos
- tik tok app video