காதலர் தினம்-உருவான கதை !

காதலர் தினம்!

உலகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது காதலர் தினம்.

முதன் முதலாக ரோமானிய மன்னர்களின் ஆட்சியில் தான் வேலன்டைன்ஸ் தின கொண்டாட்டத்திற்கான சான்றுகள் இருப்பதாக கூறுகின்றனர்.
மேற்கத்திய பழக்கமாக இது இருந்தாலும் சிறிது காலம்   கழித்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.

valentines-day
valentines-day

ரோமாபுரி நாட்டில் , திருமணம் செய்வதால் ஆண்கள் தங்களின் வீரத்தை இழக்கக்கூடும் அவர்கள் போரில் சிறப்பாக பங்களிக்க மாட்டார்கள் ,அதனால் மக்கள் யாருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது  என்ற உத்தரவை பிறப்பித்தார் மன்னர் .ஆனால் அரசின் அறிவிப்பை மீறி பாதிரியார் வேலன்டைன்ஸ் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதையறிந்த காதல் ஜோடிகள் அங்கு படையெடுக்க ஆரம்பித்தனர் பாதரியார் திருமணம் செய்து வைத்தார் இந்த செய்தி அறிந்த மன்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு மரண தண்டனையும் விதித்தார்.

அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறைக்காவலர் பார்வையற்ற மகள் மீது காதல் மலர்ந்தது தனக்கு கண் பார்வை கிடைத்ததைப் போல பல மடங்கு சந்தோஷத்தில் இருந்தாள்.அப்போது ஒரு அதிர்ச்சி அவளுக்கு காத்திருந்தது இவர்களின் காதல் விஷயம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது. அதனால் அவள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டாள்.

பாதிரியார் வேலன்டைன்ஸ் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது தன் காதலிக்கு கடிதம் ஒன்றை எழுதினார் அந்த கடிதத்தின் கடைசியில் ” உன்னுடைய வேலன்டைன் இடமிருந்து “என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது.

அவர் கொல்லப்பட்ட அந்த நாள் கிபி 270 பிப்ரவரி 14. இந்த நாளை தான் உலகம் முழுவதும் வேலன்டைன்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளுக்கு பல்வேறு வரலாற்றுக் கதைகளும் உள்ளன. ஆனால் பெரும்பாலும் பேசப்படுவது இந்த கதைதான் இதற்கான சான்றுகள் சரிவர கிடைக்கவில்லை.

இந்த கொண்டாட்டமானது 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அவற்றைப் பார்ப்போம்.

பிப்ரவரி 7       –  ரோஸ் டே

பிப்ரவரி 8        – ப்ரொபோஸ் டே

பிப்ரவரி 9       –  சாக்லெட்  டே

பிப்ரவரி 10     –  டெடி பியர்  டே

பிப்ரவரி 11     –  ப்ராமிஸ் டே

பிப்ரவரி 12     – ஹக் டே

பிப்ரவரி 13     – கிஸ் டே

பிப்ரவரி 14     – வேலன்டைன்ஸ் டே

வேலண்டைன்ஸ் டே அன்று என்ன ஆடை என்ன அர்த்தம் :

மஞ்சள்       – காதல் தோல்வி அடைந்தவர்

ஆரஞ்சு       – இன்று என் காதலை சொல்ல போகிறேன்

கருப்பு         – காதலில் எனக்கு விருப்பம் இல்லை.

நீளம்           –  நான் யாரையும் காதலிக்கவில்லை யார் வேண்டுமானாலும் காதலை                                   சொல்லலாம்

பிங்க்           – காதல் ஏற்றுக்கொள்ளப்படும்

வெள்ளை  – ஏற்கனவே காதலிக்கிறேன்.

 

 

Searches related to valentines day

  • valentines day ideas
  • valentines day movie
  • valentines day date
  • valentines day gifts for him
  • valentines day history
  • valentines day gifts for her
  • valentines day quotes
  • valentines day decor

 

Close